அஜித்தோட முடிந்த சாம்ராஜ்யம்.. திடீர் பிரச்சினையால் மொத்தத்தையும் க்ளோஸ் செய்த தயாரிப்பாளர்

சமீபத்தில் வெளியான துணிவு படம் அஜித்திற்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று வசூலில் முதலிடத்தை கொடுத்து வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்தார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றினார்.

இது குறித்து அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட போது இந்த படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அஜித் இந்த படத்தில் டப்பிங் வேலையை முடித்துக் கொடுக்காமல் தாமதமாக்கி இருக்கிறார். ஏற்கனவே அஜித்திற்கும் இந்தப் படக் குழுவினருக்கும் ஆரம்பத்தில் இருந்து சிறு மனக்கசப்புகள் இருந்து வந்திருக்கிறது.

Also read: இரண்டு கதாநாயகிகளுடன் ஜோடி போடும் அஜித்.. விக்னேஷ் சிவன் வைக்க போகும் டபுள் ட்ரீட்.!

அந்த வகையில் அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும் அதனால் தான் அஜித் ஷூட்டிங்ளிருந்து சிறிது நாட்கள் ஓய்வில் பைக் பயணம் மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர். மேலும் போனி கபூருக்கு வலது கரமாக இருந்து வந்தது ஜீ ஸ்டுடியோஸ் தான்.

அவர்களுடன் தற்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டனர். பின்பு தமிழ் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இந்தி படங்களை மட்டும் தயாரிக்க முடிவெடுத்து விட்டார் போனிகபூர். மேலும் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் அடுத்த படத்தில் இயக்கவிருக்கிறார்.

Also read: கோமாளி ரீமேக் உரிமையை கை பற்றிய போனி கபூர். ஹிந்தியில் ஹீரோ யார் தெரியுமா ?

அஜித்திற்கு ஏற்கனவே போனி கபூருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படத்தை அவரிடம் கொடுக்காமல் இவரை விட பெரிய புரொடக்ஷன் இடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக தான் அடுத்த படத்திற்கு லைக்கா ப்ரொடக்ஷன் இடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அஜித்தின் துணிவு படம் தான் போனி கபூருக்கு கடைசியாக தமிழில் கிடைத்த வாய்ப்பாக இருக்கும். இப்படத்தை அடுத்து தமிழ் படத்துக்கு நோ சொல்லிவிட்டு தெறித்து ஓடிவிட்டார். ஒரு சின்ன விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மொத்தத்தையும் க்ளோஸ் பண்ணிட்டார்.

Also read: மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்

- Advertisement -