குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போது தெரியுமா? விடாமுயற்சிக்கு முன்பே நாள் குறித்த அஜித்

Actor Ajith : விடாமுயற்சி படம் தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை போய்க்கொண்டு தான் இருக்கிறது. இந்த படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் நச்சரித்து வந்தனர்.

ஆனால் அதற்குள்ளாகவே அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானது. மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாக இருக்கிறது.

அஜித்தின் ரசிகனாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் ஆனது. அதிலும் முக்கால்வாசி படப்பிடிப்பது ஜப்பானில் படமாக்கப்பட உள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரனின் மார்கண்டனி படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் படத்தின் அறிவிப்பு வெளியான உடனே ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமை பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி

அஜித்தின் குட் பேக் அக்லி படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் 35 நாட்கள் ஷூட்டிங் மீதம் உள்ளது.

ஆனால் மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியவில்லை. நிதி நெருக்கடியில் வேறு லைக்கா நிறுவனம் உள்ளது. ஆகையால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாக அதிக வாய்ப்பு உள்ளது.

அதற்குள்ளாகவே அஜித்தின் குட் பேட் அக்லி படம் தொடங்கப்பட இருக்கிறது. ஆகையால் விடாமுயற்சி படத்திற்கு முன்னதாக குட் பேட் அக்லி படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகிறது

Sharing Is Caring:

அதிகம் படித்தவை