3 முறை காப்பி அடிக்கப்பட்ட குட் பேட் அக்லி டைட்டில்.. அஜித் 4வது முறையா வைக்கும் இங்கிலீஷ் டைட்டில்

Good Bad Ugly is Ajith’s used fourth time English title for his movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் கதை, கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்து விடுவது போல்  படத்தின் தலைப்பும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது. 

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் அடுத்த படத்திற்கான டைட்டில் சமீபத்தில் வெளியானது. குட் பேட் அக்லி என பெயரிடப்பட்ட படத்தின் தலைப்பை கேட்டு திரைப்பிரபலங்கள் பலரும் ஆச்சரியபட்டனர்.

முதன்முறையாக 1966 ஆண்டு cow boy கதையை அடிப்படையாகக் கொண்ட மூன்று நாயகர்கள் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படத்தில் இந்த டைட்டில்  தி குட், தி பேட், தி அக்லி என்று பயன்படுத்தப்பட்டது. 

அதன் பின் 2013  மலையாள திரைப்படத்தில் மேக்னாராஜ் மற்றும் ஸ்ரீஜித்விஜய் நடித்த திரைப்படத்திற்கு குட் பேட் அண்ட் அக்லி என பெயரிடப்பட்டது.

“குட் பேட் அக்லி”  என்கிற டைட்டிலை பயன்படுத்த காரணம்

கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் டைட்டிலை மட்டுமே தனது படங்களில் உபயோகித்து வந்தார் அஜீத். அசல், என்னை அறிந்தால்,வலிமை, வீரம், விவேகம், வேதாளம், துணிவு என சுத்த தமிழ் வார்த்தைகளாக அமைந்து டைட்டிலுடன் அவரது ஹீரோயிசத்தையும் தெள்ளத் தெளிவாக கூறியது. 

முதன்முறையாக 2001 இல் சிட்டிசன் என்னும் ஆங்கில தலைப்பை தன் படத்தில் உபயோகித்தார். அதற்குப்பின் 2002இல் வெளியான  ரெட்  மற்றும் வில்லன் படங்களில் ஆங்கில தலைப்பு உபயோகப்படுத்தப்பட்டது.

இப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழ் தலைப்பிற்கு மாறியவர் திடீரென இப்போது தன்னுடைய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தது எதற்காக? என்ற கேள்விகள் அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய  மார்க் ஆண்டனி திரைப்படம்  டைம் டிராவல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோன்று அஜித்தின் இத்திரைப்படமும் டைம் டிராவல் ஆக்சன் திரில்லர் மூவியாக உருவாக உள்ளது. 

மூன்று காலகட்டங்களில்  உருவாவது போலவும் அதில் பயணிக்கும் அஜித்தின் மேனரிசத்தை விளக்குவதாக உள்ளதால் இதனை “குட் பேட் அக்லி” என்ற தலைப்புடன் பொருந்தி வைத்துள்ளனர். 

இதற்கு அடுத்ததாக உள்ள சூட்சமம் என்னவென்றால் காலம் ஒரு மனிதனை நல்லவனாகவும், அதே சமயம் கெட்டவனாகவும் மாற்றும் சக்தி கொண்டது. அப்படி மாற்றப்பட்ட மனிதன், இறுதியில் திருந்தி, வருந்தி தன் வாழ்க்கையை  முடித்துக் கொள்வதாக அமைக்கப்பட்டதே இந்த வாழ்வின் தத்துவம். அதை தத்ரூபமாக கூற வருகிறார் அஜித் உடன் இணையும் ஆதிக்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்