சிவகார்த்திகேயனால் பல கோடி நஷ்டம்.. திருப்பி விட்டு வேடிக்கை காட்டும் தயாரிப்பாளர்

தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் கடந்த 2019ஆம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்த இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மிகப்பெரிய விளம்பரத்துடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் தனக்கு கொடுக்க வேண்டிய 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை இன்னும் ஞானவேல்ராஜா தரவில்லை என்று அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்தச் செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஞானவேல்ராஜா ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மிஸ்டர் லோக்கல் திரைப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனிடம் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் அப்போது படத்தை எடுக்க முடியாததால் சில வருடங்களுக்குப் பின் மீண்டும் அக்ரிமெண்ட் போடப்பட்டு அதில் அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதன்படி அவருக்கு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் இந்த படத்தை ராஜேஷ் தன் இயக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கட்டாய படுத்தியதாகவும், இந்த படத்தினால் தனக்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஞானவேல்ராஜா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மீதமிருக்கும் சம்பள பாக்கியை வரியோடு சேர்த்து எனக்கு தர வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார். பிறகு படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்தும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் அந்த பணத்தை வேண்டாம் என்று ஞானவேல் ராஜாவிடம் கூறியிருக்கிறார்.

இப்போது பல ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜாவின் மீது இப்படி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் உண்மையை மறைத்து இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்த சிவகார்த்திகேயனுக்கு அபராதம் அளிக்க வேண்டும் என்றும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஞானவேல் ராஜா தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் இந்த செயல் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்