அறுவை சிகிச்சையில் மாத்திடலாம் என்ற கௌதமி.. உங்க போதைக்கு நான் ஊறுகாயா என கடுப்பான மகள்

உலகநாயகன் கமலஹாசனை பிரிந்த பிறகு கௌதமி தற்போது தனியாக வசித்து வருகிறார். இதுவரை கமல்ஹாசன் தரப்பில் இருந்து கௌதமிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. கௌதமியும் அதை எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் தான் நிற்பேன் என அடம் பிடிக்கிறாராம்.

அந்த வகையில் தன்னுடைய மகளை எப்படியாவது கமலஹாசனின்

gauthami-daughter-photos-cinemapettai
gauthami-daughter-photos-cinemapettai

மகள்களுக்கு போட்டியாக சினிமாவில் முன்னணி நடிகையாக மாற்றிவிட வேண்டும் என தொடர்ந்து பல இயக்குனர்களிடம் தன் மகளுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு வருகிறாராம்.

கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தினார். அதேபோல் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் இரண்டு பேருமே அவுட்.

கமல்ஹாசனின் மகள்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு போட்டியாக கௌதமி தன்னுடைய மகளை களமிறக்க முடிவு செய்துள்ளார் போல. சொந்தக் காசு போட்டு படம் எடுக்க கூட ரெடியாக இருக்கிறாராம் கௌதமி.

இருந்தாலும் கதை சொல்லும் இயக்குனர்கள், உங்கள் மகள் அழகாக இருக்கிறார் நன்றாக நடிக்கலாம் ஆனால் ஹீரோயினுக்கு ஏற்ற முகபாவம் இல்லையே என சொல்லி விடுகிறார்களாம். இருந்தாலும் எப்படியாவது ஹீரோயினாக ஆக்கிவிட வேண்டும் என ஒரு முடிவோடு இருக்கிறாராம் கௌதமி.

அதற்காக பல முன்னணி நடிகைகள் மூக்கு, உதடுக்கு சில அறுவை சிகிச்சைகளை செய்ததை போன்று நாமளும் முயற்சி செய்யலாமே எனவும் ஐடியாவில் உள்ளாராம். உங்க போதைக்கு நான் ஊறுகாயா என சொல்ல முடியாத அளவுக்கு உள்ளுக்குள்ளேயே கொதித்து கொண்டிருக்கிறாராம் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்