மலையாள படத்தை ரீமேக் பண்ணும் கௌதம் மேனன்.. இந்த படத்துல காதலே இருக்காதே

தமிழ் சினிமாவில் காதல் படங்களை மட்டுமே எடுக்க கூடிய ஒரே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே காதலை மையமாகக் கொண்டுதான் கதைகள் அமைந்திருக்கும். அந்த அளவிற்கு படத்திற்கு படம் வித்தியாசமான முறையில் தனது காதல் காட்சிகளை படமாக்கி இருப்பார்.

சமீபகாலமாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடைசியாக ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் ஹிட்டான பிரபல படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். தற்போது அதற்கான வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மலையாளத்தில் வெளியான நாயட் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.

nayattu
nayattu

ஆனால் இப்படத்தில் காதல் காட்சிகளைத் விட முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. அதனால் பலரும் கௌதம்மேனன் காதல் காட்சிகளை அழகாக எடுத்து விடுவார் ஆனால் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்போது கௌதம் மேனன் இதனை எப்படி கையாள்வார் என ஒரு சிலர் கேட்டு வருகின்றனர்.

ஆனால் கௌதம் மேனன் இப்படத்தின் காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை தாண்டி படத்தின் கதை சிறப்பாக இருப்பதால் கதையை வைத்து படமாக்க இருப்பதாக கூறியுள்ளார். அதாவது தேவையான இடத்தில் காதல் காட்சிகளும் ஆக்சன் காட்சிகள் மட்டுமே இடம் பெறும். மற்றபடி காட்சி காட்சி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை என கூறியுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்