பல மாதங்களாக கிடப்பில் கிடந்த கௌதம் மேனனின் படம்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் அப்டேட்

கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் இயக்குனர் கதாசிரியர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பல்துறை மன்னராவார். கௌதம் மேனன் படங்கள் என்றாலே ஒரு வித்யாசமான திரைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் பயணத்தை தொடர்ந்தார். மின்னலே திரைப்படம் வெற்றி பெற்று இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. கௌதம் மேனனின் காதல் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வாரணம் ஆயிரம், மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்றவை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட படங்களில் சில. ஆக்ஷன் திரைப்படங்களிலும் சிறிதும் குறைவில்லாமல் இயக்கி இருப்பார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் திரில்லர் ஆக்சன் நிறைந்த திரைப்படங்களாக மக்களிடையே வலம் வந்தது.

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் நடிக்கும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ திரைப்படம் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கோவிட்-19 காரணமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் ஒரு சில காதல் காட்சிகளை எடுக்க இருந்தனர். ஆனால் தற்போது அதை இந்தியாவிலேயே எடுத்து 100 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் செப்டம்பரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் கதையின்படி ஹீரோ லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பணக்கார வீட்டு  பெண்ணை பாதுகாக்கும் bodyguard’ ஆக இருப்பது தான்.

Joshua Imai Pol Kaakha
Joshua Imai Pol Kaakha

நீண்ட காலம் நிலுவையில் இருந்தாலும் இப்போதும் ஜோஷ்வா திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப் படத்தின் பாடல்கள் வெளியாகி அதிக எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -