திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கோடிகளில் சம்பளம் வாங்கியும் பிரயோஜனமில்லை.. கௌதம் மேனன் கடனை வைத்து விளையாடும் தயாரிப்பாளர்

நடிப்பில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை ஃபாலோ பண்ணும் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். தனக்கு உண்டான பாணியில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார். இவர் படம் தயாரிப்பது மற்றும் அல்லாமல் படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இவர் எடுக்கும் காதல் படங்களில் இவர் தன் தனித்துவமான ஸ்டைலில் ரசிகர்களை கட்டிப்போட்டவர் என்று சொல்லலாம். இவர் சூர்யாவின் காக்க காக்க ,கமலின் வேட்டையாடு விளையாடு, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்களை எடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்த வெற்றி இயக்குனர்.

இப்பொழுது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை முடித்து விட்டார். அதன் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு நிறைய கடன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடனுக்காக இப்பொழுது படங்களில் நடித்தும், தயாரித்து வருகிறார்.

இவருக்கு கடன் இருக்கிறது என்றால் ஆச்சரியம்தான். தற்போது இவருக்கு பல கஷ்டங்கள் இருக்கிறது அதனால் பெரிய தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இடம் மூன்று படங்கள் இயக்கி, தன் கடனை அடைப்பதாக ஒத்துக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே வாங்கிய கடனுக்காக இரண்டு படங்களை எடுத்து கொடுத்துவிட்டார்.

புதுமுக நடிகர் வருனை வைத்து ஜோஷுவா என்ற படமும், சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படமும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மாதிரி எடுத்து முடித்து விட்டார். இப்பொழுது மூன்றாவது படத்திற்கு ஐசரி கணேஷ் விதை தூவி உள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஐசரி கணேஷ்  வலியுறுத்தி வருகிறார். கௌதமின் கடனுக்காக இந்த படத்தை அவர் ஏற்கனவே ஐசரி கணேஷ் இடம் கமிட் செய்துள்ளார். இப்பொழுது இந்த மூன்றாவது படத்தை முடித்தால் தான் கடன் முழுவதும் அடையும்  என்று இதில் மும்முரமாக இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

- Advertisement -

Trending News