சோறு தண்ணி இல்லாம 2 டைரக்டர் வீட்டு வாசலில் கிடந்த கௌதம் மேனன்.. கொட்டு வாங்கி வேலை செய்த முதல் படம்

Gautham Menon : இந்த காலத்திற்கேற்ப ரொமான்டிக் படங்களை கொடுத்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த இவர் இப்போது நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கிறார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கௌதம் மேனன் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைய இரண்டு இயக்குனர்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்.

சோறு, தண்ணி இல்லாம அவர்களது வாசலில் கிடையாய் கிடந்து பல விஷயங்களை கற்று தெரிந்து கொண்டுள்ளார். முதலாவதாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

பொதுவாகவே பாரதிராஜா தனது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அதட்டி, உருட்டி வேலை வாங்கி விடுவார். சில சமயங்களில் கையையும் நீட்டியதுண்டு. தங்கர் பச்சானின் கார்மேகங்கள் கலைகின்றன படத்தில் பாரதிராஜா மற்றும் கௌதம் மேனன் நடித்திருந்தனர்.

இந்த பட விழாவில் கௌதம் மேனன் பேசிய போது ஒரு காட்சியில் பாரதிராஜா தன்னை அடித்ததாக கூறியிருந்தார். மேலும் அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அடிகள் வாங்கியிருக்க கூடும் என்று நினைவுகூர்ந்தார்.

நாயகன் பார்த்து இம்ப்ரஸான கௌதம் மேனன்

ஒவ்வொரு இயக்குனரும் சில படத்தின் ஈர்ப்பின் காரணமாக டைரக்டராக வேண்டும் என்ற எண்ணம் வரும். அவ்வாறு கௌதம் மேனன் நாயகன் படம் பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளார். மேலும் 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு படத்தில் உதவி இயக்குனராக கௌதம் மேனன் வேலை பார்த்தார்.

அதன் பிறகு தன்னுடைய முதல் படமான மின்னலே படத்திற்காக மாதவனை அணுகி உள்ளார். அப்போது மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் மாதவன் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் மின்னலே படத்தின் கதையை மணிரத்னத்திடம் கூற சொல்லி இருக்கிறார்.

ஆனால் இந்தக் கதை மணிரத்னத்தை பெரிதும் ஈர்க்கவில்லை. இருந்த போதும் மாதவன் நடித்துக் கொடுத்த நிலையில் மின்னலே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு மணிரத்தினத்துடன் கௌதம் மேனன் பயணிக்க ஆரம்பித்தார்.

மணிரத்னம் படத்தில் எவ்வாறு காதல் காட்சிகள் இடம் பெறுமோ, அதை தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப மாடனாக கௌதம் மேனன் கொடுக்க ஆரம்பித்தார். அதோடு மணிரத்னம் இடமிருந்து சினிமாவில் பல நுணுக்கமான விஷயங்களை கற்று இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்