ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கண்டு கொள்ளாத விக்ரம், முக்கிய முடிவு எடுத்த கௌதம் மேனன்.. துருவ நட்சத்திரத்திற்கு பின்னால் இருக்கும் இப்படி ஒரு சோகம்

Dhuruvanatchathiram: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் என்றால் அது வெந்து தணிந்தது காடு. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட்டுகள் எதையுமே அவர் வெளியிடவில்லை. தொடர்ந்து மற்ற ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கேரக்டர்களின் நடித்து கொண்டிருந்தார்.

கௌதம் மேனன் இயக்கத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படத்தை மீண்டும் தூசி தட்டி ரிலீசிற்கு தயார் செய்தார் கௌதம் மேனன். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் இப்போது மாறியிருக்கிறார். துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இப்போது துருவ நட்சத்திரம் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் பயங்கர பிசியாக இருக்கிறார் கௌதம் மேனன். பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தை பற்றி நிறைய விஷயங்களை பேசியதோடு, அவர் பட்ட கஷ்டங்களை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜான் என்னும் கேரக்டரில் பயங்கர ஸ்டைலிஷ் ஆக நடித்திருக்கிறாராம். மேலும் ஜெயிலர் படத்தின் வில்லன் விநாயகம் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது. இதைப்பற்றி பட குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

துருவ நட்சத்திரம் படத்தில் பணிகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார சிக்கல் தானாம். எந்த உதவியும் கிடைக்காத நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், கிடைக்கும் பட வாய்ப்புகள் எல்லாவற்றையும் உபயோகித்து நடித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அந்த பணத்தை வைத்து தான் துருவ நட்சத்திரத்தை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார் கௌதம் மேனன். தொடர்ந்து படங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, துருவ நட்சத்திரம் படத்திற்கு பணம் தேவைப்பட்டதால் தான் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நான் உபயோகப்படுத்திக் கொண்டேன் என பதிலளித்திருக்கிறார் கௌதம் மேனன்.

- Advertisement -

Trending News