Tamil Cinema News | சினிமா செய்திகள்
20 வருடத்திற்கு பின் ‘மின்னலே’ படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த கௌதம் மேனன்.. இவர் தான் வெற்றிக்கு முக்கிய காரணம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் கௌதம் வாசுதேவ மேனன். இவரது இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் இவருடைய படங்கள் வெளிவரும் போது பல தடைகளை கொண்டிருந்தாலும், வெளிவந்த பிறகு வெற்றிப்படமாக மாறுவதையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
இந்தநிலையில் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் ‘மின்னலே’ படத்தை பற்றிய பல ரகசியங்களை வெளியே கூறியிருக்கிறார். இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகின்றன.
அதாவது கௌதம் மேனன் முதலில் இயக்கிய படம் மின்னலே. ஆனால் இந்தப்படத்தில் 20 சதவிகிதம் தான் கௌதமின் பங்களிப்பு இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

Minnale
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மாதவனுடைய பங்களிப்பு தான் அதிகமாக இருந்ததாம். ஏனென்றால் கௌதம் முதலில் இந்த படத்தில் இரண்டு பசங்களும், ஒரு பொண்ணும் நண்பர்களாக இருப்பார்கள் என்பது மாதிரி தான் கதை எழுதி இருந்தாராம்.

Minnale-cinemapettai
ஆனால் மாதவன் தான் கதையை மாற்றி, ரெண்டு பசங்களும் கல்லூரியில் எதிரியாக இருப்பார்கள். பின்பு ஒரு பொண்ணுக்காக சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று கதையை மாற்றினாராம்.
ஆனாலும் தன்னுடைய முழு உழைப்பையும் அந்த படத்திற்காக போட்டதாகவும், குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பது, விவேக் வசனம் எழுதுவது, நாகேஷ் இந்த படத்தில் நடிப்பது, இது எல்லாமே தன்னுடைய ஐடியா தான் என்று கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார் .
எனவே அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை உள்ள காதலர்களால் போற்றப்படும் மின்னலே படத்தை பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்படுகிறது.
