சிம்பு – கௌதம் மேனன் இணையும் புதிய படத்திற்கு வந்த சிக்கல்.. எதுவுமே புடிக்கல!

நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிம்பு மற்றும் திரிஷாவிற்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்றளவும் த்ரிஷாவை பலரும் ஜெர்சியாகவே பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இதனையடுத்து மீண்டும் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா படம் உருவானது. இதில் அறிமுக நடிகையாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இப்படத்திற்கு ஆதரவளித்தனர்.

தற்போது இவர்கள் மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் பணிபுரிய உள்ளனர். இப்படத்திற்கு நதியினிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும், தாமரை பாடல்கள் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் தற்போதைய நிலை பற்றி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசி உள்ளார். அவர் கூறியதாவது,”எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. கொரோனாவால் படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் கூறிய கதை சிம்புவுக்கு சுத்தமாக பிடிக்காததால், எழுத்தாளர் ஜெயமோகன் புதிதாக கதை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயமோகன் தற்போது எழுதியுள்ள கதைக்கு நதிகளில் நீராடும் சூரியன் என்ற தலைப்பு சுத்தமாக பொருந்தவே இல்லையாம். இதனால் தலைப்பை மாற்றலாமா என படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

vtv
vtv

இயக்குனர் கௌதம் மேனன் படத்திற்கு மற்றொருவர் வசனம் எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -