விட்ட இடத்தை பிடிக்க போராடும் கௌதம் கார்த்திக்.. வரிசை கட்டி நிற்கும் நான்கு படங்கள்!

தமிழ் சினிமாவின் ‘நவரச நாயகன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக்கின் மகன் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கௌதம் சினிமா பின்புலத்துடன் அறிமுகமாகி இருந்தாலும், இன்றுவரை சினிமா உலகில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க கடினமாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏனென்றால் ஆரம்பத்தில் சூப்பர் டூப்பர் ஆக தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை, ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற ஆபாச படங்களில் நடித்ததன் காரணமாக மங்கிப் போனது. இதனால் தந்தை போல கௌதமும் பெரிய ஹீரோவார் என்று எண்ணிய  பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் தொடர்ந்து நான்கு படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கௌதம் கார்த்திக் ‘கடல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக  பலரது மனதை கவர்ந்தார். இருந்தபோதிலும் அடல்ட் படங்களில் நடித்தது, காதல் வலையில் சிக்கியது போன்ற சில காரணங்களால் கௌதமால் அவரது தந்தை போல ஜொலிக்க முடியவில்லை.

தற்போது கௌதம் தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தொடர்ந்து நான்கு படங்களில்  ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

கௌதம் தற்போது ஒப்பந்தமாகியிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ:

  • பத்து தல
  • இயக்குனர் எழில் – பெயரிடப்படாத படம்
  • இயக்குனர் பத்ரி – பெயரிடப்படாத படம்
  • இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி – பெயரிடப்படாத படம்
gautham-karthik
gautham-karthik

எனவே இவ்வாறு  வரிசையாக அடுத்தடுத்து  கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் புது படங்கள் தயாராக உள்ள தகவலை கேட்ட பலருக்கு கௌதமின் மீது புது நம்பிக்கை பிறந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்