கொடுத்த சத்தியத்தை காப்பாற்றாத கௌதம் மேனன்.. வீணாகப் போன சிக்ஸ் பேக் உடம்பு

கௌதம் மேனன் இயக்கிய படங்கள் பொதுவாகவே ஒரு வித்தியாசமாகவும் மற்றும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் வகையில் தான் இருக்கும். அப்படி அவர் இயக்கிய படங்கள் எல்லாமே வெற்றி படமாக தான் இருந்திருக்கிறது. இவர் இயக்கத்தில் வெளிவந்த படத்தின் மூலம் மாஸ் ஆன ஹீரோவாக ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார். இதில் அஜித், திரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. இதில் இவர் நடித்த விக்டர் எனும் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

Also read: டப்பிங் ஆர்டிஸ்ட் ரோகினி உருக உருக எழுதிய காதல் பாடல்.. திகைத்துப் போன கௌதம் மேனன்

இதில் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தாலும் இவரது கேரக்டர் அதிகமாய் பேசப்பட்டது. இந்த படத்தில் கௌதம் மேனன் கேட்டுக்கொண்டபடி அருண் விஜய் தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் அஜித்தே இவரை பாராட்டும் அளவிற்கு இவரது ரோல் அமைந்தது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் அஜித்தை விட அதிக அளவில் இயக்குனர் இவருக்கு திரையில் இடம் கொடுத்திருப்பார்.

அந்த சமயத்தில் அருண் விஜய்யின் முழு அர்ப்பணிப்பை பார்த்த கௌதம் மேனன் மிகவும் வியப்படைந்தார். அதனால் அவரிடம் அந்தப் படம் முடியும் தருவாயில் ஒரு வாக்குறுதி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் இன்று வரை அந்த வாக்குறுதியை காப்பாற்றியதாக தெரியவில்லை.

Also read: ரஷ்ய ஸ்டண்ட் மாஸ்டரை அசர வைத்த அருண் விஜய்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அந்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் ஆரம்பத்தில் செயல்பட்டாலும் தற்போது அது கைவிடப்பட்டது போல் தெரிகிறது. அதாவது கௌதம் மேனன் அருண் விஜய் இடம் அடுத்து ஒரு படம் உங்களை ஹீரோவாக வைத்து எடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதனால் அருண் விஜய் இவரை மிகவும் நம்பி இருந்தார்.

இதனை அடுத்து இது சம்பந்தமாக கௌதம் மேனனிடம் அருண் விஜய் கேட்ட பொழுது கண்டிப்பாக படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அதன்பின் அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுக்க ஆரம்பித்தார். அதற்காக அருண் விஜய் பெரிய அளவில் ஒர்க் அவுட் செய்திருந்திருக்கிறார். மேலும் அந்தப் படத்தில் அருண் விஜய்க்கு விக்டர் என்னும் பெயரே வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த படம் 15 நாட்கள் சூட்டிங் நடந்தது. ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை அப்படியே இந்த படம் நின்று போனது. இன்று வரை அதை தூசி தட்டவே இல்லை. கௌதம் மேனன் கொடுத்த வாக்குறுதி காற்றோடு பறந்து போய்விட்டது. அந்தப் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து வீணாய் போனது தான் மிச்சம். இதனால் இப்பொழுது அருண் விஜய் திராட்டில் நின்று கொண்டிருக்கிறார்.

Also read: அருண் விஜய்யுடன் காத்து கூட நுழையாத அளவிற்கு நெருக்கமாக இருக்கும் ரெஜினா.. தெறிக்கும் ரொமான்டிக் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்