தோனி, சச்சினை தொடர்ந்து உருவாகும் கங்குலி பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?

சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் அளவுக்கதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் தோனி மற்றும் சச்சினை தொடர்ந்து அடுத்ததாக இந்திய கிரிக்கெட்டின் தாதா சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது.

மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாகவே வாழ்ந்து காட்டினார். இந்த படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வசூல் மழை பொழிந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சச்சினும் தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை சச்சின் பில்லயன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் எடுத்தார். ஆனால் தோனி அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட சச்சின் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக உள்ளது. கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடர் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி சட்டையை கழற்றி சுற்றியதெல்லாம் வேற லெவல் ஆக்ரோஷம். கங்குலியின் குணத்திற்கு ஏற்ப ஒரு ஆக்ரோஷமான நடிகர் தான் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளாராம். இவர் இதுவரை பெரிய அளவில் ஆக்ரோஷமாக நடித்து பார்த்ததில்லை. போதாக்குறைக்கு முகத்தை பார்த்தாலே பாவமாக இருக்கும் தோற்றம். இவர் எப்படி கங்குலியின் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ganguly-ranbir-kapoor-cinemapettai
ganguly-ranbir-kapoor-cinemapettai