கங்கை அமரனை அசிங்கப்படுத்திய கவுண்டமணி.. பணத்திற்காக நன்றியை மறந்த கொடுமை

தனக்கு இருக்க திறமையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவராக இருக்கக்கூடியவர் தான் கங்கை அமரன். எந்த அளவுக்கு இவர் சினிமாவை நேசிக்கிறார் என்பதற்கு உதாரணமாக இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை சினிமாவிற்காக அர்ப்பணித்திருக்கிறார். இவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி பல ரசிகர்களின் மனதில் இசையால் குடி கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட இவர் எழுத்தாளர் மற்றும் இயக்குனராக 20 படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார். அந்த படங்களில் முக்கியமாக யார் இருக்கிறார்களோ இல்லையோ கவுண்டமணி கண்டிப்பாக நடித்திருப்பார். அந்த வகையில் கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கோயில் காளை, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்து அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

Also read: இந்த மாதிரி ஒரு சாவு சில்க் ஸ்மிதாவுக்கு வந்திருக்கக் கூடாது.. மன வேதனையில் ஓப்பனாக பேசிய கங்கை அமரன்

இப்படி இருக்கையில் கங்கை அமரன் இயக்கி, எழுதி, தயாரித்த படம் தான் கோயில் காளை. இப்படத்தை எடுக்கும்போது கங்கை அமரனுக்கு கொஞ்சம் பண பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நகைச்சுவைக்கு கவுண்டமணி, ராமசாமி என்ற கேரக்டரில் நடித்தார். அப்பொழுது கங்கை அமரன் பண பிரச்சனையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு படப்பிடிப்புக்கு வந்த கவுண்டமணி எனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இவர் பொதுவாகவே பண விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர். அதனால் நமக்கு பணம் வருமா வராதோ என்ற சந்தேகத்திலேயே நடித்து முடித்து விட்டார். அதன் பின் டப்பிங் வருவதற்கு முன் மீதி பணத்தை கொடுத்தால் தான் நான் டப்பிங் வருவேன் என்று மேனேஜரிடம் சொல்லி இருக்கிறார். இதை கங்கை அமரனிடம் நேரடியாக சொல்லவில்லையாம்.

Also read: கரகாட்டக்காரன் படத்தை பார்த்துவிட்டு கங்கை அமரனுக்கு வாய்ப்பு கொடுத்த கமல்.. கெடுத்துவிட்ட இளையராஜா!

பிறகு இதை கேள்விப்பட்ட கங்கை அமரனுக்கு மிகவும் கஷ்டமாக போய்விட்டது. இதனால் படத்தை எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் வெளியிட்டு அவர் கேட்ட பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று யோசித்து படத்தை வெளியிடுவதற்கு தயார் செய்திருக்கிறார். அதன் பின் அவர் கேட்ட பணத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார் . அத்துடன் நான் கவுண்டமணிக்கு பல படங்களில் வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தேன். அதனால் அவருடைய திறமையை வளர்த்துக்கொண்டு சினிமாவில் ஒரு நல்ல நிலைமைக்கு வளர்ந்து வந்தார்.

ஆனாலும் அதை எல்லாம் மறந்து இந்த படத்திற்கு கொஞ்சம் கூட நன்றியை இல்லாமல் என்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்று மிகவும் வருத்தத்துடன் கூறி இருக்கிறார். இதனால் என்னால் அவருடைய முகத்தை கூட நேரால் பார்க்க முடியாத அளவுக்கு கஷ்டமாக போய்விட்டது. ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை என்னிடம் வந்து நீங்கள் எதற்கும் பயப்படாமல் கவலைப்படாமல் உடம்பை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பணம் விஷயம் எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிவிடும் என்று எனக்கு ஆறுதலாக கூறினார். இதை தற்போது அவர் அளித்த பேட்டியில் இந்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Also read: கவுண்டமணியின் டைமிங்கை கச்சிதமாய் பிடிக்கும் 5 நடிகர்கள்.. கெமிஸ்ட்ரியில் பின்னி பெடலெடுத்த விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்