நடிப்பில் மிரட்டும் ஜி வி பிரகாஷ்.. எல்லா வித்தையும் கற்றுக் கொடுத்தது அவர்தான்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயில் படம் இவரை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியுள்ளது.

சென்னை புறநகர் குடியிருப்பில் வசிக்கும் மக்களின் துயரங்களை பற்றி தெளிவாக விளக்குகிறது இப்படம். படம் ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜிவி பிரகாஷின் நடிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் ஜெயில் படத்தின் மூலம் அவர் தன்னுடைய நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த அளவுக்கு அவர் நடித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பு ஜிவி பிரகாஷ், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு எவ்வாறு நடிப்பு சொல்லித் தருவார் என்று அனைவருக்கும் தெரியும். பாலா படத்தில் நடித்த அனுபவம்தான் ஜிவி பிரகாஷ் இவ்வளவு திறமையாக நடிப்பதற்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்