படுக்கையறை காட்சியா முடியவே முடியாது.. கறார் காட்டிய நடிகை, இயக்குனருக்கு செம டோஸ்

பொதுவாக படங்களில் ஹீரோயின்கள் அதிக கிளாமராக நடிப்பது, ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது, அவ்வளவு ஏன் தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் இதற்கு விதிவிலக்காக உள்ளனர். படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே தங்களின் லிமிட் இதுதான் என மிகவும் கறாராக கூறி விடுகிறார்கள்.

இந்நிலையில் இளம் நடிகை ஒருவர் படுக்கையறை காட்சிக்காக இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் சிட்டிசன் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் சரவண சுப்பையா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அறிமுக நாயகன் கதிரவனும், அவருக்கு ஜோடியாக நடிகை அனகாவும் நடித்துள்ளனர். படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் கதிரவன் மற்றும் அனகா இடையே முதலிரவு காட்சிகளை படமாக்கி உள்ளனர். அதில் ஹீரோவுடன் அதிக நெருக்கம் தேவைப்பட்டதாம்.

இதனால் படுக்கை அறை ரகசியங்களை படமாக்க கூடாது என அந்த காட்சியை படமாக்க அனகா எதிர்ப்பு தெரிவித்ததோடு இயக்குனருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கதைக்கு அந்த காட்சி தேவைப்படுகிறது என கூற அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளனர்.

அனகாவும் பாதி காட்சியில் நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்குமேல் அவரால் அந்த காட்சியில் நடிக்க முடியவில்லையாம். அதனால் இதற்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்னை கட்டாயப்படுத்தாதீர்கள் என மிகவும் கறாராக கூறி விட்டாராம்.

அதனால் இயக்குனர் சரவண சுப்பையா வேறு வழியின்றி அனகாவிற்கு பதில் டூப் போட்டு அந்த காட்சியை படமாக்கி முடித்தார்களாம். சண்டை காட்சிகளுக்கு சரி பெட்ரூம் காட்சிகளுக்குமா டூப் போடுவீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்