மன அழுத்தத்தினால் உண்மையை மறைக்கும் இசைவாணி.. பிரண்ட்ஸ் மூலமாக கசிந்த தகவல்

பிக் பாஸ் சீசன்5 போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கானா பாடகி இசைவாணியின் இல்லற வாழ்க்கை குறித்து அவரது தோழிகள் சில தகவல்களை வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அத்துடன் இசைவாணியின் திருமண வாழ்க்கை குறித்த முக்கியமான புகைப்படம் ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கூறினர். அந்த வரிசையில், கானா பாடகி இசைவாணி அவரது வாழ்க்கையில் நடந்த கஷ்டமான சமயங்களை எப்படி கடந்து வந்தார் என்பதையும், மற்றும் அவர்களது தந்தை எவ்வாறு அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வளர்த்தார் என்பதையும் மட்டுமே கூறினார். அவரது திருமண வாழ்க்கையைப் பற்றி அவர் கூறவில்லை.

இதனை எதற்காக மூடி மறைக்க வேண்டும்? என்று இவர்களின்  ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். இதுவும் ஒரு சங்கடமான வாழ்க்கை பயணம் தானே இதையும் கூறி இருக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது கானா பாடகி இசைவாணி மணமகள் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வெகுவாக பகிரப்பட்டும் வைரலாகியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கானா பாடகி இசைவாணியின் தோழிகள், இசைவாணியின் வாழ்க்கையில் நடந்த திருமணத்தை பற்றி கூறியுள்ளனர். அவர்களுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம்  நடந்ததாகவும், இசைவாணி டிரம்ஸ் இசைக் கலைஞர் சதீஷ் என்பவரை திருமணம் புரிந்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்தத் திருமணம் மிகவும் அவசரமாக நடத்தப்பட்ட திருமணமாக இருந்தது என்றும் கூறியுள்ளனர்.

isaivani-bigg-boss
isaivani-bigg-boss

திருமணம் ஆனதை தொடர்ந்து இவர்கள் இருவரும் அனைவரை போலவும் பரஸ்பர தம்பதியராக சில நாட்களுக்கு மட்டுமே ஆனந்தமாக இருந்தார்கள் என்று இசைவாணியின் தோழிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு இசைவாணியும் டிரம்ஸ் இசைக் கலைஞருமான சதீஷும் ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக சட்டபூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்களாம்.

இதனால் இசைவாணி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அவளை அந்த மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்தது நாங்கள் தான் என்றும் இதை பற்றி மீண்டும் பேசினால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுமோ என்ற பயத்தினால் கூட அவள் தன்னைப் பற்றி கூறாமல் இருந்திருக்கலாம் என்று அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை தனது இல்லற வாழ்க்கை குறித்து இசைவாணி கூறியிருந்த தகவல்களை விஜய் டிவியின் பிக் பாஸ் குழு, இசைஞானியின் கருத்துக்கள் அனைத்தையும் எடிட்டிங் செய்து இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தோழிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்