ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

3 கோடி பேருக்கு இலவச சேவை, Airtel- ன் அட்டகாசமான அறிவிப்பு.. நிம்மதி பெருமூச்சு விட்ட பக்தகோடிகள்!

ஏர்டெல் நிறுவனம் நுகர்வோர் மோசடி அழைப்புகளில் இருந்து விடுபட வேண்டி இலவச சேவையை வழங்கவதாக அறிவித்துள்ளது.

ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகள்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களைத் தடுக்கவும், பாதிப்பிற்குள்ளாகும் மக்களை இதிலிருந்து பாதுகாக்கவும் வேண்டி, அரசும், சைபர் போலீசாரும், டிராய் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொரு பயனாளியும் எதாவது ஒரு வகையில் ஸ்பேம் கால்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஸ்பேம் கால்களை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? அதைக் கண்டுபிடித்து அதிலிருந்து நாம் எப்படி விடுபது போன்ற கேள்விகள் வாடிக்கையாளர்களுக்கு எழுந்து வருகிறது.

சமீபத்தில் டிராய், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை ஸ்பேம் அழைப்புகளில் இருந்து பாதுக்க முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளில் இருந்து நுகர்வோர் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

ஏர்டெல்லின் இலவச சேவை

இந்த நிலையில் சைபர் குற்றங்களில் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்த மோசடி அழைப்புகளைத் தவிர்க்க இலவச சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 3 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமும் நுகர்வோர் இந்த ஸ்பேம் கால்களினால் பாதிக்கப்பட்டு வருகின்ற்னர். இந்த ஸ்பேம் கால்களை கண்டறிந்து பிளாக் செய்வதற்கு ஏர்டெல் நிறுவனம் ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஏர்டெல் தமிழ் நாடு பிரிவின் மார்க்கெட்டிங் குழு தலைவர் சந்தீப் கூறியதாவது;

தினமும் எனக்கும் கூட இப்பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. நம்ம நெட்வொர்க்கில் சுமார் 60 சதவீதம் ஒரு கஸ்டமருக்கு ஒரு நாளில் 3 காலாவது வந்து கொண்டிருக்கிறது. இதை ஏர்டெல் நிறுவனம் புரிந்து கொண்டு, இதற்கான தீர்வாக, முதன் முறையாக சஸ்பெக்டேட் ஸ்பேம் என்ற புதியதொரு கான்செப்டை அறிமுகம் செய்திருக்கிறோம்.

இதில் ஒரு கஸ்டருக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் ஒரு பேட்டர்ன் ரெடி செய்து, இவர்கள் எப்படிப்பட்ட கால் அட்டன் செய்கிறார்கள், அதன் கால அளவு, அவர்கள் டேட்டா யூஸ் பண்ணாமல் கால் மட்டும் யூஸ் பண்ணுவது, லொகேசனை மாற்றுவது, கால் செய்வது, ஐஎம்ஐ மாற்றுவது இப்படி உள்ள நம்பரை நாம் டேக் செய்கிறோம்.

அதன்படி, சஸ்பெக்டேட் ஸ்பேம் என்று காலில் வரும். அதன்பிறகு கஸ்டமர் இதை பிளாக் செய்யலாம். இது கஸ்டமரில் கையில் உள்ளது. இது தமிழ் நாட்டில் உள்ள 3 கோடி கஸ்டமருக்கு ப்ரீ, இதில் ஆப் இல்லை. எம்.எம்.எஸுக்கு இதே பேட்டனும் இப்படித்தான். அதில் சஸ்பெக்டேட் ஸ்பேம் என்ற வார்த்தை. தற்போது ஆங்கிலத்தில் உள்ளது விரைவில் தமிழிலிலும் வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது இண்டிமேட் பண்ணும் கஸ்டமர் தான் ஸ்பேம் நம்பரை கால் பண்ண வேண்டும். 60 சதவீத ஸ்பேம் கால்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இதைக் குறைத்திருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கா உழைத்திருக்கிறோம். மற்ற நெட்வொர்க்குகளில் இது கட்டணம். ஆனால் ஏர்டெல்லில் ப்ரீ சர்வீஸ் என்று தெரிவித்துள்ளார்.

எப்படியாவது ஸ்பேம், மோசடி அழைப்புகளில் இருந்து விடுபட வாடிக்கையாளர்கள் தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நுக்ர்வோருக்கு பயனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூலம் ஸ்பேம்களும் குறையும் என தெரிகிறது. இது ஏர்டெல் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News