ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

மன்மதனே நீ கலைஞன் தான்.. 4-ஆவது திருமணம் செய்த முரட்டு வில்லன்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், கடந்த ஆண்டு வெளியான விஜய் நடித்த லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்தில் கூட கொஞ்சம் வில்லங்கமான ஒருவர் தான். இவர், உலகை உலுக்கிய 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தும் சிறைவாசம் அனுபவித்தார். சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்காமலேயே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். இது இன்னமும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.

இவருடைய அந்தரங்க வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளும் அவ்வப்போது வருவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் இவர் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் சம்பந்தமான விடியோக்கள் கூட இணையதளத்தில் வைரலாக.

சில வருடங்களுக்கு முன்னாள் இவர் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் பிரபலமாக இருந்த இவரை தமிழ் ஆடியன்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார் லோகி. லியோ படத்தில், விஜய்யின் அப்பா ஆன்டனி தாஸ் கேரக்டரில் சஞ்சய் தத் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.

65 ஆவது வயதில் 4-ஆவது திருமணம்?

பாலிவுட்டில் முன்பு ப்ளே பாய் என்று சஞ்சய் தத் பரவலாக அறியப்பட்டிருந்தார். சஞ்சய் தத் மன்யதா என்பவரை கடந்த 2008 ஆம் ஆண்டு 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்னதாக ரியா பிள்ளை, ரிச்சா சர்மா என்பவர்களை திருமணம் முடித்திருந்தார் சஞ்சய் தத்.

இவர்களில், ரியா பிள்ளை ஏர் ஹோஸ்டஸ். ரிச்சா சர்மா மாடல் அழகியாக இருந்தவர். ரிச்சா 1996 ஆம் ஆண்டு மூளை கட்டியால் உயிரிழந்தார். இவர்களுக்கு திரிஷாலா தத் என்ற மகள் இருக்கிறார். மேலும் சஞ்சய்தத் – மன்யதா தம்பதிக்கு ஷஹ்ரான் மற்றும் இக்ரா என 2 குழந்தைகள் உள்ளனர்.

மொத்தம் தனது 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் சஞ்சய் தத். இதற்கிடையே அவர் கல்யாண தோற்றத்தில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் சில புகைப்படங்கள் வலைதளங்களில் பரவின. திருமணத்திற்கு இவர் இன்னும் எண்டு கார்டு போடவில்லையா என்ற கேள்வி பலருக்கும் வந்தது.

ஆனால், தனது புதுவீடு கிரகப் பிரவேசத்திற்காக மனைவி மன்யதாவுடன் சஞ்சய் தத் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள்தான் அவை என தற்போது தெரியவந்துள்ளது. ஆகையால் இவர் 4 ஆவது திருமணம் எல்லாம் செய்யவில்லை. செய்த லீலைகள் எல்லாம் போதும் என்று நிறுத்திவிட்டார். அதுமட்டுமல்லாமல், இதற்க்கு மேல ஒரு திருமணம் செய்தால், பாவம் சொத்தகளை பிரிப்பதிலும் சிக்கலாகி விடும். அதனால் அந்த தவறை கனவில் கூட அவர் செய்யமாட்டார்.

- Advertisement -spot_img

Trending News