4 நண்பர்களை இன்றும் விட்டுக் கொடுக்காத விஜய் சேதுபதி.. அன்பளிப்பாய் கொடுத்த ஆசை கார்

Vijay Sethupathi: விஜய் சேதுபதியை பொருத்தவரையில் வந்த நிலை மறவாதவர். தன்னுடைய கஷ்டகாலங்களில் உதவிய நண்பர்களை தற்போது வரை அருகில் வைத்திருக்கிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி இன்றளவும் விட்டுக் கொடுக்காத நான்கு நண்பர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அட்டகத்தி தினேஷ் : ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு கதாநாயகனாக வளர்ச்சி அடைந்தவர் அட்டகத்தி தினேஷ். இவர் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்திருந்தார். அதிலிருந்தே தற்போது வரை அட்டகத்தி தினேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நட்பாக பழகி வருகிறார்கள்.

சௌந்தர்ராஜன் : மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவருடைய சக நண்பராக நடித்திருந்தவர் சௌந்தர்ராஜன். மேலும் தான் முதன் முதலாக வாங்கிய லான்சர் காரை சௌந்தர்ராஜனுக்கு கொடுத்து அழகு பார்த்தார் விஜய் சேதுபதி.

மணிகண்டன் : காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அதுவும் மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நண்பனுக்காக நடித்துக் கொடுத்திருந்தார்.

அருள் தாஸ் : பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அருள்தாஸ். இவர் விக்ரம், விருமன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதியின் தர்மதுரை, இடம் பொருள் ஏவல், சிந்துபாத் போன்ற படங்களில் அருள்தாஸ் நடித்திருக்கிறார். இவர்களிடையே ஒரு நல்ல நட்பு தற்போது வரை இருந்து வருகிறது.

இவ்வாறு இவர்களுடன் விஜய் சேதுபதி தற்போதும் நட்பு பாராட்டி வருகிறார். எவ்வளவு பெரிய உச்சிக்கள் சென்றாலும் விஜய் சேதுபதியின் இந்த குணம் தான் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்போது விஜய் சேதுபதி நிறைய படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.