பொங்கல் ரேசுக்கு களத்தில் மோத தயாராக உள்ள 4 படங்கள்.. 57 வயது நடிகருடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

Four Films To Release For Pongal 2024: பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதுமே பண்டிகை நாட்களை குறி வைத்து தான் வெளியாகும். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நான்கு படம் வெளியாகிறது.

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வந்த படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் வைத்துள்ளனர். ஏனென்றால் இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி இருக்கிறது.

Also Read : போதையில் கதை கேட்கும் நடிகர்.. கூட நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்

அயலான் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் வெளியான நிலையில் இப்படம் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த சூழலில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் அதற்கான பணிகள் இப்போது மும்மரமாக நடந்து வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயனுடன் 57 வயது நடிகர் ஒருவரும் போட்டி போட இருக்கிறார். அதாவது விக்ரமின் தங்கலான் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. தங்கலான் படத்தில் மாளவிகா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Also Read : கோடிக்கணக்கில் கடனில் தத்தளிக்கும் 5 படங்கள்.. ஆணியே புடுங்க வேண்டாம்னு கப்பிச்சிப்புன்னு இருக்கும் விக்ரம்

கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சலார். சமீபகாலமாக பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. பாகுபலி 2 படத்திற்கு பிறகு அவர் எந்த வெற்றி படமும் தரவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான ஆதிபுருஷ் படம் மிகப்பெரிய அடி வாங்கி இருந்தது.

இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் மற்றொரு படமான கல்கி 2898 AD படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபாஸுடன் கமல், அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கல்கி 2898 AD படத்தின் மீது பிரபாஸ் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குண்டூர் காரம் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

Also Read : இந்த வாரம் வெளிவர உள்ள 9 படங்களின் அப்டேட்.. கேஜிஎஃப் இயக்குனர், பிரபாஸ் காம்போ ஜெயிக்க வாய்ப்பிருக்கா?

- Advertisement -