சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஷால், சிம்புக்கு எல்லாருக்கும் குருவே அந்த ஹீரோ தான்.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட சோக கதை

Vishal and Simbu: பொதுவாக சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தை எடுக்கறதுக்குள்ள இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் குதிரைக்கொம்பாகத் தான் இருக்கிறது. அந்தளவிற்கு ஒவ்வொருவரையும் அலைக்கழிப்பார். அதாவது சூட்டிங்க்கு சிம்புவுக்கு எப்போ வர தோன்றுகிறதோ அப்பொழுதுதான் வருவார். வந்தாலும் அவர் இஷ்டப்படி தான் நடித்துக் கொடுத்துட்டு போவார்.

அதே மாதிரி தான் விஷாலும் சமீபத்தில் நடிக்கும் படங்களில் ரொம்பவே மெத்தனமாக நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர்களுக்கு குருவாக இன்னொரு ஹீரோ சினிமாவில் சுற்றி கொண்டிருக்கிறார். இது தெரியாமல் வசமாக இவரிடம் சிக்கிக் கொண்டார் இயக்குனர் சங்கர். பிரம்மாண்டத்திற்கு பெயர் வாங்கின இவரால் தமிழில் நடிகரை தேர்ந்தெடுக்காமல் அக்கடதேசத்தில் உள்ள நடிகரை நாடிப் போனார்.

சரி போன இடத்துலயாவது சட்டுபுட்டு என்று வேலையை முடிச்சுட்டு திரும்பி வருவார் என்று பார்த்தா இவரை அந்த ஹீரோ வச்சு செய்கிறார். அதாவது 50 நாள் சூட்டிங்னா 20 நாள் மட்டும் தான் வருகிறாராம். இவரால்தான் முக்கால்வாசி படத்தை முடிக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறதாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பித் தவிக்கிறார்.

அதாவது ஒரு பழமொழி சொல்லுவாங்களே அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை. தற்போது இவருடைய விஷயத்தில் சரியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் வேண்டாம் என்று தெலுங்கு பக்கம் போனார். ஆனால் அங்கேயும் இவரால் சரியான நேரத்தில் ஒரு படத்தை கொடுக்க முடியவில்லை. அப்படி சங்கரை படாதபாடு படுத்தி வரும் நடிகர் யார் என்றால் ராம்சரண்.

அதாவது சங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை எடுத்து வருகிறார். ஆனால் சரியாக படப்பிடிப்பு நடக்காததால் படத்தை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாமல் தவிக்கிறார். இதற்கு காரணம் ராம்சரணின் அசால்ட்டுதனமான நடவடிக்கைகள் தான். சரியான நேரத்தில் சொன்ன மாதிரி சூட்டிங் வருவதில்லை.

அப்படியே வந்தாலும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் கொஞ்ச நேரத்திலேயே பேக்கப் பண்ணி போய் விடுகிறார். இதனால் சங்கர் வேறு வழி இல்லாமல் மௌனமாக இருந்து காரியத்தை சாதித்து வருகிறார். எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஒரு மெத்தனமான ஹீரோ இருப்பாங்க போல. இது தெரியாம சங்கர் தலையை கொடுத்து மாட்டிக் கொண்டார்.

- Advertisement -

Trending News