5 நாட்களுக்கு கோடியில் சம்பளம் கேட்ட பிரபலம்.. பிசாசு-2 படத்தின் மொத்த பட்ஜெட்டே அவ்வளவுதான்

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தான் நடிக்க வேண்டும் என்ற பார்வையை மாற்றி, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பினை வெளிக்காட்டி தற்போது உச்ச நாயகனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு தற்போது மிஷ்கின் தன்னுடைய முந்தைய சூப்பர் ஹிட் படமான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை பிசாசு2 என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

எனவே விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகளை ஐந்து நாட்களில் எடுத்து முடிக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளாராம். அதற்கு விஜய் சேதுபதிக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட உள்ளதாம்.

pisasu-2-vijay-sethupathi

அதாவது படத்தின் பட்ஜெட்டின் 50 சதவீத தொகையை விஜய்சேதுபதிக்கு சம்பளமாக கொடுக்க உள்ளதால், படக்குழு திக்குமுக்காடி உள்ளது.

இருப்பினும் விஜய்சேதுபதியை இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் இயக்குனர் மிஷ்கின் தெளிவாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

- Advertisement -