ஆங்கில தலைப்பில் வெளியாக உள்ள 5 பெரிய பட்ஜெட் படங்கள்.. சுத்த தமிழன்னு வேற சொல்றாங்க.!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தற்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் ஆங்கிலத் தலைப்பே தற்போது வைக்கத் தொடங்கி உள்ளனர். ஆங்கில தலைப்புடன் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ.

ஃபீஸ்ட் – டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தனது அடுத்த படத்திற்கு ஃபீஸ்ட் என்ற தலைப்பை வைத்துள்ளார். நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கோப்ரா – நடிகர் விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரின் கதாபாத்திரம் ஒரு நாகப்பாம்பு போல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக படத்திற்கு கோப்ரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டான் –  இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் படமும் ஆங்கிலத் தலைப்பு கொண்டே இருந்தது.

எனிமி –  அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் படம் இது. இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இரண்டு எதிரெதிரான கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருப்பதால் இந்த படத்திற்கு எனிமி என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

பார்டர் – அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் பார்டர். இது இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் தீவிரவாத பிரச்சினைகளைப் பற்றிய படம். அதனால் இந்தத் தலைப்பு இப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

beast-vijay-sun-pictures
beast-vijay-sun-pictures
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்