புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தோல்வியை பார்க்காத 5 தமிழ் இயக்குனர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்த லோகேஷ்

இப்பொழுது வரும் படங்கள் ரசிகர்களிடையே அதிக ஹைப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த படத்தின் கதைகள் விறுவிறுப்பாகவும் மற்றும் பார்க்கத் தூண்டும் அளவிற்கு சுவாரசியத்தையும் கொண்டு வருவது தான். அந்த வகையில் அதிக பாராட்டப்பட வேண்டியது அந்த படத்தின் இயக்குனர்கள். அத்துடன் சில இயக்குனர்கள் இதுவரை இயக்கிய படங்களில் தோல்வியை பார்க்காமல், வெற்றியை மட்டும் அடைந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றி இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம்.

அட்லீ : இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார். அத்துடன் விஜய்யின் வெற்றி இயக்குனர் என்ற பெயரை வாங்கிக் கொண்டார். இவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக ஆனது. இதன் பிறகு இவர்களுக்கிடையே நட்பு அதிக அளவில் நீடித்து விட்டது. இப்பொழுது பாலிவுட் சூப்பர் ஹிட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படமும் இவருக்கு கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Also read: ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்

வெற்றிமாறன்: இவரைப் பொறுத்தவரை நாவல்களை மையமாகக் கொண்டுதான் படத்தை இயக்குவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சமூக கருத்தை மையமாகக் கொண்டிருக்கும். அத்துடன் இவர் இயக்கும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. இதுவரை இவர் இயக்கிய படங்களில் எந்தவித தோல்வியையும் சந்திக்காமல் வெற்றியுடன் விருதுகளை வாங்கி குவித்து வருகிறார்.

எச் வினோத்: எச் வினோத் தற்போது உள்ள வெற்றி இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக பிரபலமாகிவிட்டார். இவருடைய முதல் படமான சதுரங்க வேட்டை படத்திலேயே ஆழமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இதுவரை இவர் இயக்கிய ஐந்து படங்களுமே வெற்றி படங்களாக தான் இவருக்கு கை கொடுத்திருக்கிறது. அதில் மூன்று படங்கள் அஜித் நடிப்பில் வெளியாகி ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.

Also read: துணிவுக்கு பின் லோகேஷ் உடன் நேரடியாக மோதும் எச் வினோத்.. யாரும் எதிர்பார்க்காத மெர்சல் கூட்டணி

ஷங்கர் : இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை நிலைத்து நிற்கும் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பெயர் பெற்றவர். இவரது திரைப்படங்கள் பொதுவாகவே சமூக பிரச்சினைகள் மற்றும் அதற்காக விழிப்புணர்வூட்டும் விதமாக படங்களை எடுப்பதில் திறமை வாய்ந்தவர். சினிமாவின் முன்னணி இயக்குனராக நிலைத்து நிற்கிறார். இவர் படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஏனென்றால் இவரது படங்களில் நடித்தால் போதும் வெற்றி நிச்சயம் என்று நம்புகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் : இவர் மாநகரம் திரைப்படத்தை இயக்கத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நுழைந்த குறுகிய காலத்தில் ஒரு வெற்றி இயக்குனர் என்ற கிரீடத்தை பெற்றுவிட்டார். இவருடைய ஸ்பெஷாலிட்டியே இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சற்று வித்யாசமாகவும் ஒன்றோடு ஒன்று இணைத்து கதைகள் சொல்லும் விதமும் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரை வந்தடையும். இவர் இயக்கிய படங்களில் இதுவரை வெற்றியை மட்டுமே பார்த்த இயக்குனராக இருக்கிறார். அத்துடன் இவரை யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

Also read: இதுவரை கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரே ஹீரோ.. புது ட்ரெண்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்

- Advertisement -

Trending News