எக்ஸை திரும்ப காட்டி கதி கலங்க செய்த 5 படங்கள்.. மனதை கனக்க செய்த கார்த்திக் ஜெஸி காதல்

வித்யாசமான கதை களங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் காதலித்த ஜோடிகள் இணைவது போன்று பல படங்கள் வந்துள்ளது. ஆனால் தன்னுடைய காதலி பிரிவுக்குப் பின் சந்தித்த படங்கள் சொர்ப்பம் தான். அவ்வாறு எக்ஸ்சை திரும்பி காட்டி கதி கலகச் செய்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

உன்னை நினைத்து : சூர்யா, சினேகா, லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னை நினைத்து. இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா லைலாவை காதலிப்பார். லைலாவின் பெற்றோர்கள் வற்புறுத்தியதால் சூர்யாவை கழட்டி விட்டு வேறு ஒருவருடன் சென்று விடுவார். அதன் பிறகு சினேகா சூர்யாவை காதலிப்பார். கடைசியில் லைலாவை சந்திக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைக்கும். லைலா நினைத்தபடி அவரை டாக்டராகி அழகு பார்ப்பார் சூர்யா.

Also Read : சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்டு வந்த சூர்யா.. முதல் பட ரகசியத்தை உடைத்த குணசேகரன்

சில்லுனு ஒரு காதல் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் சூர்யாவின் வாழ்க்கையில் எக்ஸ் காதலியான பூமிகா வருகிறார். சூர்யா மீது ஜோதிகா அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து பூமிகா வெளிநாடு சென்று விடுவார்.

96 : விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 96. இந்த படத்தில் பள்ளிப் பருவத்தில் காதலித்த விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் பிரிந்து விடுகின்றனர். திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆன திரிஷா 20 வருடங்களுக்குப் பின்பு விஜய் சேதுபதியை பார்க்கிறார். அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சி பூர்வமான விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

Also Read : முத்தின பின் ஜொலித்த 5 முரட்டு ஹீரோக்கள்.. பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கண்ட விஜய் சேதுபதி 

அழகி : காலத்தால் அழியாத படங்களில் அழகி படமும் ஒன்று. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தேவயானியை திருமணம் செய்து கொண்டு வாழும் பார்த்திபன் தனது முன்னாள் காதலியான நந்திதா தாஸை விதைவை கோலத்தில் பார்த்து மனம் நொறுங்கி போவார்.

விண்ணைத்தாண்டி வருவாயா : சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் கார்த்திக், ஜெஸியாக இருவரும் அசதி இருப்பார்கள். மேல் வீட்டில் இருக்கும் திரிஷாவை உருகி உருகி காதலிக்கிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் சிம்புவை விட திரிஷா மூத்தவர் என தெரிந்தவுடன் அவரை விட்டு பிரிகிறார். கடைசியில் சிம்பு திரிஷாவை சந்திக்கும் காட்சி ரசிகர்களை மனதை கனக்க செய்தது.

Also Read : ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

- Advertisement -spot_img

Trending News