கதைத் திருட்டு வழக்கில் சிக்கிய 5 படங்கள்.. கடைசியாக சிக்கிய வலிமை படம்

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் சில படங்கள் முந்தைய படங்களின் சாயலில் உள்ளதால் சர்ச்சையில் சிக்குகிறது. அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் படமும் கதைத் திருட்டு வழக்கில் சிக்கியது. அவ்வாறு திருட்டு சர்ச்சையில் சிக்கிய 5 படங்களை பார்க்கலாம்.

கத்தி : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் மீண்டும் இணைந்த படம் கத்தி. இப்படம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கத்தி படத்தின் கதை கோபி நாயனார் தன்னுடைய கதை என்ன குற்றம் கூறினார். இதனால் ஆர் முருகதாஸ் மீது வழக்கும் தொடர்ந்தார். ஆனால் தனது தரப்பை நிரூபித்த முருகதாஸ் பிரச்சனையை தீர்த்தார்.

எந்திரன் : ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் எந்திரன். இப்படத்தில் ரஜினிகாந்த் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அறிவியல் சார்ந்த கதையாக எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் என்பவர் எந்திரன் படம் தன்னுடைய கதை என கூறினார். இதற்கான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

96 : பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியானது 96. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. பாரதிராஜாவின் முன்னால் ஆக்சிடென்ட் சுரேஷ் என்பவர் 96 படத்தின் கதை தன்னுடையது என கூறினார்

சர்கார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சர்கார். இப்படம் ரிலீசுக்கு முன்பே கதைத் திருட்டு சிக்கலை சந்தித்தது. வருண் ராஜேந்திரன் என்பவர் சார்கார் படம் தன்னுடைய கதை என கூறினார். அதன்பிறகு கே பாக்யராஜின் உதவியுடன் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

வலிமை : ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வலிமை. 2016 ஆம் ஆண்டு மெட்ரோ படத்தில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் வலிமை படத்தில் இருந்தது. இதனால் மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.