விஜய்க்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 ஹீரோயின்கள்.. நடிகையாக நடிக்க முடியாத ஆதங்கத்தை தீர்த்த மீனா

பொதுவாகவே விஜய் படம் என்றால் டான்ஸ், ஸ்டைல், காமெடி என்று அனைத்தும் கலவையாக ஒரு கமர்சியல் படமாக இருக்கும். அத்துடன் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு நான் நீ என்று போட்டி போட்டு நடிகைகள் வருவார்கள். அப்படி இருக்கையில் சில நடிகைகள் முன்னணி நடிகையாக இருந்தும் இவருக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அந்த குறையை தீர்ப்பதற்காக இவருடன் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் அது என்னென்ன பாடல்கள் என்றும் பார்க்கலாம்.

சிம்ரன்: இவர் கனவு கன்னியாக பல பேர் மனதை கொள்ளை அடித்தவர். பல முன்னணி ஹீரோவுடன் ஜோடி போட்டு லக்கி ஹீரோயின் ஆக வலம் வந்தவர். அத்துடன் விஜய்க்கு ஜோடியாக 5 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர்கள் தான் பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படத்தில் விஜய்க்காக ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். அந்தப் பாடல் “அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட பூபதியும் நானடா” .

Also read: இளசுகளை ஜொள்ளு விட வைத்த சிம்ரனின் பேயாட்டம்.. அல்வா இடுப்பில் கிறங்கிய அஜித்

ரோஜா: இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரும் விஜய்யும் ஃபேமஸ் ஆக இருந்த காலத்திலேயே இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்துக்கு கூட நடிக்கவில்லை. அதற்கு காரணம் ரோஜா பல முதுமையான நடிகர்களுக்கு ஜோடி போட்டதால் இளம் ஹீரோவான விஜய்க்கு ஜோடி போடுவதற்கு பல இயக்குனர்கள் தயக்கம் காட்டி இருக்கிறார்கள். ஆனாலும் விஜய்யுடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காக கிடைத்த வாய்ப்பு தான் நெஞ்சினிலே படத்தில் “தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.

ஷில்பா ஷெட்டி: இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பொழுது ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி இவர்கள் சேர்ந்த ஆடிய பாடல்” மேக் மேக் மேக்மேக்கரீனா… மேக் மேக் மேக் மேக்கரீன” இப்பாடல் செம ஹிட் பாடலாக ஆனது.

Also read: மீனாவை குஷிப்படுத்த கலா மாஸ்டரின் சூப்பர் பிளான்.. மொத்த திரையுலகிற்கும் அழைப்பு

மீனா: தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். ஆனால் விஜய்க்கு ஜோடியாக மட்டும் எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக விஜய்யின் ஷாஜகான் படத்தில் ஆடி இவருடைய ஆதங்கத்தை தீர்த்து விட்டார். அந்தப் பாடல் தான் சரக்கு வச்சிருக்கேன்… இறக்கி வச்சிருக்கேன்… கருத்த கோழி முளகு போட்டு… வறுத்து வச்சிருக்கேன்… என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார்.

கிரண்: இவர் விஜய்க்கு ஜோடியாக எந்த படங்களிலும் நடித்ததே இல்லை. ஆனால் திருமலை படத்தில் ” வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா” என்ற ஒரே ஒரு பாட்டுக்கு விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பார்.

Also read:  அம்மா போட்ட தப்பு கணக்கால் தான் இப்படி நடந்தது.. மனம் நொந்து மீனா சொன்ன உண்மை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்