அரைகுறை கதையை நம்பி இறங்காத அஜித்.. பாதியிலேயே தூக்கி எறியப்பட்ட 5 இயக்குனர்கள்

Ajith: பொதுவாக இயக்குனர்கள் முழு கதையையும் ஹீரோக்களிடம் சொல்ல மறுத்து விடுவார்கள். எடுத்துக்காட்டாக கௌதம் மேனன் படப்பிடிப்பு நடத்தும் போது தான் பாதி கதையை எழுத ஆரம்பிப்பார். இப்படி இருக்கும் சூழலில் அஜித்தை பொறுத்தவரையில் தன்னுடைய படத்தின் முழு கதையையும் கேட்ட பிறகு தான் நடிக்க சம்மதிப்பார். அவ்வாறு அரைகுறை கதையை சொன்னதால் பாதியிலேயே 5 இயக்குனர்களை அஜித் நிராகரித்து விட்டார்.

நந்தா பெரியசாமி : லிங்குசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் நந்தா பெரியசாமி. இவர் மாயாண்டி குடும்பத்தார், யோகி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். எஸ்எஸ் சக்கரவர்த்தி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு அஜித், கிரண், சினேகா ஆகியோரை வைத்து மகா என்ற படத்தை நந்தா பெரியசாமி எடுத்தார். சில பிரச்சனை காரணமாக இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

சரண் : அஜித்துக்கு காதல் மன்னன், அமர்க்களம் என்ற ஹிட் படங்களை சரண் கொடுத்து இருந்தார். மேலும் கமலுக்கு மிகப்பெரிய ஹிட் படமான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தையும் சரண் தான் இயக்கியிருந்தார். இந்த சூழலில் அஜித், சரண் கூட்டணியில் ஏறுமுகம் என்ற ஒரு படம் உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களினால் இந்த படம் பாதியிலேயே தடைப்பட்டது.

Also Read : அஜித் ஆரம்பிக்கும் மருத்துவ முகாம்.. விடாமுயற்சியில் ஒரு புது முயற்சி

பாலா : ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் தான் ஒப்பந்தமாகி இருந்தார். இதற்கான குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையையும் அஜித் வாங்கி இருந்த நிலையில் அதன் பிறகு பாலா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அட்வான்ஸ் தொகையை அஜித் திருப்பிக் கொடுத்து விட்டார்.

கேஎஸ் ரவிக்குமார் : குடும்பம் பாங்கான கதையை எடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர் தான் கே எஸ் ரவிக்குமார். மேலும் ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கியமான இயக்குனர்களில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இந்நிலையில் அஜித்தை வைத்து கேஎஸ் ரவிக்குமார் காங்கேயம் என்ற படம் எடுப்பதாக இருந்த நிலையில் சில காரணங்களினால் தடைபட்டது.

விக்னேஷ் சிவன் : விக்னேஷ் சிவனுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்காவுடன் கைகோர்த்து இருந்தார். ஆனால் கதையில் விக்னேஷ் சிவன் சொதப்பியதால் விடாமுயற்சி படத்திலிருந்து அவரை எடுத்துவிட்டு மகிழ்ந்திருமேனியை கமிட் செய்து வைத்திருந்தனர்.

Also Read : விஜய்க்கு ஸ்பீடு பிரேக் போட்டே ஆகணும் அதிரடியாக முடிவெடுத்த அஜித்.. நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட் மாஸ்டர் டா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்