வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

சினிமாவிற்கு நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்து காதல், ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரொமான்டிக் ஹீரோ என்ற முத்திரையை பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு கதைக்கு ஏற்ற மாதிரி இவர்களை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமாக நடிப்பை காட்டி அதிலையும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

சிம்பு : VZ துரை இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு தொட்டி ஜெயா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, கோபிகா, பிரதீப் ராவத் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் சிம்புவிற்கு ஒரு கேங்ஸ்டர் படமாக அமைந்தது. இதற்கு முன்னாடி வரை காதல், ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு முன்னதாக வந்த மன்மதன் படமும் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக தான் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படத்திற்கு ஏற்ற மாதிரி இவரை மாற்றிக்கொண்டு நடித்து சூப்பர் ஹிட் படமாக்கினார்.

Also read: டி ஆர்-ஐ மிஞ்சி அலப்பறை செய்த சிம்புவின் 5 படங்கள்.. பஞ்ச் டயலாக்கால் பஞ்சர் ஆகிய காதல் படம்

ஜெய்: சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ஜெய் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஊருக்குள்ள பல சம்பவங்களை செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார். இவர் சினிமாவிற்குள் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்று வந்தார். ஆனால் இந்த மாதிரி ஒரு கேரக்டர் அமைந்ததும் எந்தவித யோசனையும் இன்றி அதற்கு ஏற்ற மாதிரியும் நடித்துக் கொடுத்தார்.

மாதவன்: இவர் ஆரம்ப கட்டத்தில் நடித்த அலைபாயுதே, என்னவளே, மின்னலே, டும் டும் டும் போன்ற பல படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து சாக்லேட் பாய் என்று ரசிகர்களின் மனதில் இடம் பெற்றிருந்தார். இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் சற்றும் வித்தியாசமான தோற்றத்தில் ஹீரோவுக்கு அப்பாற்பட்டு ஒரு கொடூரமான கேரக்டரில் இவர் நடித்தார்.

Also read: கதை நல்லா இல்லை என ஜகா வாங்கிய மாதவன்.. அல்லோலப்படும் தனுஷ் பட சூப்பர் ஹிட் இயக்குனர்

சித்தார்த்: தீரஜ் வைத்தி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு ஜில் ஜங் ஜக் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் சித்தார்த், சனந்த் , ராதாரவி ஆகியோர் நடித்தார்கள். இவரை பார்ப்பதற்கே ஒரு குழந்தை போன்ற முகம் இவர் ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பதற்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார். அப்படி நினைத்த பொழுது இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் இதுவும் இவருக்கு செட்டாகி விட்டது என்றே சொல்லலாம்.

ஜெயம் ரவி: என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பூலோகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, நாதன் ஜோன்ஸ், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்தார்கள். இந்த படத்திற்கு முன்னதாக இவர் ஜெயம், தாஸ், மழை, உனக்கும் எனக்கும், போன்று தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து ரொமான்டிக் ஹீரோ என்று முத்திரையை பெற்றவர். ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கு முரட்டுத்தனமும் செட் ஆகும் என்று நிரூபித்துக் காட்டிய படம்.

Also read: 100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

- Advertisement -

Trending News