கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்ட 5 பிரபலங்கள்.. இப்போ தனக்குன்னு கூட்டத்தை பிடித்த த்ரிஷா, சாய்

5 Celebrities became Artist: சினிமாவில் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக சாதாரண கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து போகப் போக அவர்களுக்கு என்று ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம்.

கார்த்தி: தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக அனைவரது மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சினிமாவிற்குள் நுழைந்து வெற்றி தோல்விகளை பார்த்து இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ஹீரோவுக்கான அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் நடித்த படம் தான் ஆயுத எழுத்து. இதில் சூர்யாவின் நண்பராக அங்கீகரிக்கப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்குப் பிறகு நடித்த படம் தான் பருத்திவீரன்.

சித்தார்த்: இவரைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுகளும், சர்ச்சைகளும் ஒரு பக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பை பின்னி பெடல் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த சித்தா படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் கொடுக்கும் வகையில் அற்புதமாக நடித்திருப்பார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் நடித்த படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இதில் இவர் பஸ்ஸில் பயணம் செய்யும் ஒரு நபராக வந்திருப்பார். இந்த படத்திற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு தான் பாய்ஸ்.

Also read: சித்தாவால் சித்தார்த் பட்ட அவமானம்.. ரஜினி ஃபோன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா.?

சந்தானம்: ஹீரோக்களை விட எந்த விதத்திலும் நான் குறைஞ்சவன் இல்லை என்று வரிஞ்சு கட்டி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது காமெடி கேரக்டர் தான். இதில் இவர் கொடுக்கும் கவுண்டருக்கும், நக்கல் நையாண்டிக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் நடித்த படம் பேசாத கண்ணும் பேசும். இதில் குணாலின் நண்பராக அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

த்ரிஷா: கிட்டத்தட்ட சினிமாவிற்குள் நுழைந்து 20 வருடங்கள் தாண்டிய நிலையிலும் தற்போது 40வது வயதிலும் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் அத்தனை அழகும் பொலிவும் ஒவ்வொரு படத்திற்கும் மெருகேற்றிக் கொண்டு ரசிகர்களின் மனதை கட்டி இழுக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நடித்த படம் தான் ஜோடி. இதில் சிம்ரனின் நண்பர்களில் ஒருவராக வந்திருப்பார். இந்த படத்திற்குப் பிறகு இவர் நடித்த படம் தான் மௌனம் பேசியதே.

சாய் பல்லவி: தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் ரொம்பவே பிஸியாக நடித்துக் கொண்டு ரசிக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் தான் சாய் பல்லவி. அப்படிப்பட்ட இவர் முதன் முதலில் தமிழில் தான் அறிமுகமாகி இருக்கிறார். அதில் கஸ்தூரிமான் என்கிற படத்தில் கல்லூரி பெண்ணாகவும், தாம் தூம் படத்தில் கங்கனா ரனாவத்தின் சொந்தக்கார பெண்ணாகவும் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படங்களுக்குப் பின் இவருக்கு கிடைக்கப்பட்ட வாய்ப்பு தான் மலையாளத்தில் பிரேமம்.

Also read: விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்