ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து 5 நடிகர்கள்.. சுற்றி என்ன நடக்குது என தெரியாமல் போன விஜயகாந்த்

சினிமாவில் பிரபலங்களாக இருப்பதினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரியவரும். அதில் நல்ல விஷயங்கள் எவ்வளவு தூரத்துக்கு பரவுகிறதோ அதை விட வேகமாக அவர்கள் செய்யும் தவறுகளும் தெரியும். அப்படித்தான் சில நடிகர்கள் பெரிய அளவில் பேமஸ் ஆக இருந்திருந்தாலும் அவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதை நம் கண்கூடாகவே பார்த்திருப்போம். அப்படி போதைக்கு அடிமையான நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

கவுண்டமணி: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக 80, 90களில் கலக்கியவர் தான் கவுண்டமணி. அதுவும் இவர் செந்தில் உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை இப்பொழுது வரை பார்ப்பவர்களுக்கு வயிறு வலிக்க சிரிக்கும் அளவிற்கு கவுண்டர் கொடுப்பதில் மன்னனாக இருந்தார். அப்படி இருக்கையில் இவர் மிகவும் அடிமையானது ஒரு பழக்கம் என்றால் அது குடிப்பழக்கம் தான். இதனாலையே போக போக இவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.

Also read: விஜயகாந்தின் தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம் அவரே.. பகிர் சம்பவங்களை கூறிய பிரபலம்

மணிவண்ணன்: தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்த இவர் 400 படங்களுக்கும் மேல் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் இவருடைய பேச்சுக்கும் இவருடைய டைமிங் காமெடிக்கும் அவ்ளோ ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பேரும் புகழும் கொஞ்சம் அதிகமானவுடன் தலைகால் புரியாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கலாபவன் மணி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்த தென்னிந்திய நடிகராக ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கேரக்டர் அத்துடன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் போன்ற பன்முகத் திறமை கொண்ட நடிகர். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது. அதுவும் இவர் தமிழ் நடித்த ஜெமினி, பாபநாசம் போன்ற படங்களை மறக்கவே முடியாது. இவரிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் தினமும் மது அருந்துவது. இந்த பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு இதில் அடிமையாகி விட்டார். இதனாலையே இவருடைய ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவதியால் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

Also read: இயக்குனர்கள் வில்லனாக மாஸ் காட்டிய 5 படங்கள்.. அரசியல்வாதியாக மிரட்டிய மணிவண்ணன் 

விஜயகாந்த்: 80, 90களில் ரசிகர்களை அதிகமாக தன் வசப்படுத்திக் கொண்ட நடிகர் விஜயகாந்த். இவரது படங்கள் என்றாலே கருத்துள்ள படமாகவும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வதாகவும் தவறு செய்பவர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாகவும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டியவர். அதனாலேயே மக்கள் இவரை கேப்டன் என்று கொண்டாடி வந்தார்கள். என்னதான் பெரிய மாசாக இருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் போல இவர் மது பழக்கத்திற்கு ஆளாகி அதிலேயே மூழ்கி விட்டார். இதிலிருந்து இப்பொழுது வரை இவரால் மீண்டு வர முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஜனகராஜ்: ஒரு காலத்தில் அனைத்து படங்களிலும் காமெடி நடிகராக பிசியாக நடித்து வந்தவர் தான் ஜனகராஜ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய மிக சிறப்பு இவர் பேசும் மெட்ராஸ் பாஷை தான். அதுவே பல இயக்குனர்களை கவர்ந்து தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இவர் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்றால் அது மது பழக்கம் தான். இதாலையே கொஞ்சம் சீரழிந்தும் போய்விட்டார்.

Also read: நல்லா வாழ்ந்த மனுஷன்.. இந்த ஒரு விஷயத்தால் உயிரிழந்த கலாபவன் மணி

- Advertisement -

Trending News