தமிழ் சினிமாவில் முதன் முதலாக 100 படங்களை இயக்கிய ஒரே இயக்குனர்.. பிரபுவை தூக்கிவிட்டு அழகு பார்த்த பிரபலம்

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பதெல்லாம் ரொம்ப எளிதான விஷயம் இல்லை. ஒரு படம் பிளாப் ஆனாலும் மூட்டை முடிச்சுகளை கட்ட வைத்து விடுவார்கள்.அப்படியே நிலைத்து இருந்தாலும் அடுத்தடுத்து படங்கள் அமைவதெல்லாம் குதிரைக் கொம்பான விஷயம். ஆனால் தமிழ் இயக்குனர் ஒருவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சினிமா உலகில் ஆக்டிவாக இருந்தார்.

சினிமாவில் 100 படங்களை இயக்குவதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை. ஆனால் இவர் சினிமா உலகத்திற்கு வந்த 18 ஆண்டுகளிலேயே 100 படங்களை இயக்கியிருக்கிறார். 25 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்த இவர் தன்னுடைய இறுதி நாட்கள் வரை 125 படங்களை இயக்கியிருக்கிறார்.

Also Read: ஓவர் ஆக்ட்டிங் செய்த நடிகர்.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கண்டித்த சிவாஜி

இத்தனை சாதனைகளை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன் தான். 1981 ஆம் ஆண்டு வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானார். விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படங்களை இவர்தான் தமிழ் சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தார் என்று சொல்லலாம். இவர் படங்களில் நாய், குரங்கு, பாம்பு, யானை தான் அதிகமாக நடித்திருக்கும்.

இவரின் படத்தில் விலங்குகள் எல்லாம் மெயின் ரோலிலும், ஹீரோ-ஹீரோயின்கள் எல்லாம் சைட் கேரக்டரில் நடிப்பது போலவும் கதை எழுதப்பட்டிருக்கும். இவர் 1999 ல் தன்னுடைய 100 வது படமான ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ என்னும் படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் மீனா, ரோஜா போன்ற ஹீரோயின்களை வைத்து அதிகமான சாமி படங்களை எடுத்தவரும் இவர்தான்.

Also Read: அப்பாவை பின்பற்றி ஜெயித்த 5 நடிகர்கள்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா!

மாயா, ராஜகாளியம்மன், பாளையத்து அம்மன், நாகேஸ்வரி, கோட்டைமாரியம்மன், அன்னை காளிகாம்பாள், ஸ்ரீ காளிகாம்பாள், போன்ற சாமி படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக தமிழில் குட்டி பிசாசு, ஆர்யா சூர்யா படங்களை இயக்கினார். இதில் குட்டி பிசாசு படத்தில் காரை மையமாக வைத்து திகில் படமாக எடுத்தார்.

இளைய திலகம் பிரபுவின் சினிமா வளர்ச்சியில் இயக்குனர் இராம நாராயணன் பங்கு ரொம்பவே அதிகம். சின்னஞ்சிறுசு, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா என நிறைய மொழிகளில் படம் இயக்கியிருக்கிறார்.

Also Read: இதுவரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத ஒரே ஹீரோ.. வெளிவந்த 35 வருட ரகசியம்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -