முதல் படத்திலேயே ஆஸ்கர் விருது வரை சென்ற பிரபல நடிகை யார் தெரியுமா? எல்லாம் பாக்யராஜ் பெயர் வச்ச ராசி!

இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படத்திலேயே ஆஸ்கர் விருது வரை சென்றவர் தான், அந்த பிரபல நடிகை. அவர் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

இந்திய சினிமாவில் 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்தான் ரூபினி. நடனம், வசீகரா அழகு, நடிப்பு என குறுகிய காலத்திலேயே சினிமாத்துறையில் கலக்கினார்.

1980ஆம் ஆண்டு 10 வயதில் ஹிந்தியில் ஹீரோயினான ரூபினி நடித்த அந்த படம் ஆஸ்கர் வரை சென்றதாம். அப்போது இவர் நடிப்பை பார்த்த பல இயக்குனர்களும் இவருக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆனால் பெற்றோர் தான் முக்கியம் என்பதால் அவர்கள் அறிவுரையின் பேரில் அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்துள்ளார்.

rupini
rupini

இவர் தனது மூன்றாவது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். அதுவும் “காளை காளை முரட்டு காளை” பாடலில் இவர் அனைத்து காளையர்களையும் கவர்ந்து வைத்திருப்பார்.

அதேபோல் பத்தினி பெண் படத்தில் சவாலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார். அதன்பிறகு கமலுடன் சிவராத்திரி பாடலில் அனைத்து ரசிகர்களையும் சூடேற்றினார்.

ரூபினி அவர்களின் இயற்பெயர் கோமல் மனோகர். ஆனால் இன்று வரை ரூபினி என அனைவரும் அழைப்பதற்கு காரணம் பாக்யராஜ் தான். ஏனென்றால் இவர் தான் ரூபினி என அவருக்கு சினிமாவில் பெயர் வைத்துள்ளார்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -