நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இதுதான் காரணம்.. வச்சு செய்து அனுப்பிய ரசிகர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன்5ல் மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த எபிசோடில் முதல் எலிமினேஷன் ரவுண்டு நடைபெற்றது. அதில் 5 போட்டியாளர்களின் பெயர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. அந்த ஐவர், அபிஷேக் ராஜா, மதுமிதா, நாடியா சாங், வருண், சின்னப்பொண்ணு ஆகியோராவர்.

எலிமினேஷன் ரவுண்டிற்கு முன்பு ஜொலித்தவர் யார்? காணாமல் போனவர்கள் யார்? என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது ஜொலித்தவர் என்று இமான் அண்ணாச்சியை சக போட்டியாளர்கள் கூறினார்.

காணாமல் போனவர்கள் பட்டியலில் நாடியா சாங் மற்றும் சின்னப்பொண்ணு இவர்களின் பெயரை கூறினர். அப்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. மறைந்திருக்கக் கூடிய பிறரை கவனிக்காமல் என்னை கவனித்து இருக்கிறார்கள் என்றால் நான் மறைந்து போகவில்லை என்று தானே அர்த்தம் என்று எதிர்த்துப் பேசினார்.

ஆனால் சின்ன பொண்ணு, தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தும் மறைந்து போகவில்லை, மக்களின் பார்வையிலிருந்தும் மறைந்து போகமாட்டேன் என்று கூறி உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் கதறி அழுதார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு பரபரப்பு நிலவியது. எழுந்த இந்த சலசலப்பு அடங்கிய பிறகே எலிமினேஷன் ரவுண்டு தொடங்கியது.

பிற போட்டியாளர்களை காட்டிலும் நாடியா சாங் மக்கள் ஓட்டில் குறைவாக இருந்ததால், பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார் நாடியா சாங். சக போட்டியாளர்கள் அனைவரும் நாடியா சாங்கிற்கு ஆறுதல் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nadia-cinemapettai
nadia-cinemapettai

நாடியா சாங் கடந்து வந்த தன்னுடைய வாழ்க்கையை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்துகொள்ளும்போது வளர்த்த அம்மாவை குறை சொல்லி, கட்டிய புருஷனை தலையில் தூக்கி கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் நாடியா சாங்கிற்கு குறைந்த ஓட்டுகளை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்