மெர்சலில் பற்ற வைத்த நெருப்பு.. ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர்களின் கல்லாவை நிரப்பிய தளபதியின் 6 படங்கள்

பொதுவாக ஒரு நடிகரின் படங்கள் ரிலீஸான பின்பு தான் வசூல் வேட்டையை ஆரம்பிப்பார்கள். ஆனால் தற்போது படம் ரிலீஸாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக கல்லா கட்டி வருகின்றனர். ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம், திரையரங்கு விநியோகம் என படம் வெற்றியோ தோல்வியோ ப்ரீ ரிலீஸ் வியாபாரம் பரவலாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா என்பது போல் ரிலீஸாவதற்கு முன்பே விஜய்யின் 6 படங்கள் பெருமளவு வசூலித்து உள்ளது. என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

மெர்சல்: இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்த இப்படம் 260 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப் பெற்றது. மருத்துவ துறையில் நடக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த நிலையில், இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

சர்கார்: 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அரசியல்வாதியாக விஜய் நடித்திருப்பார். தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த இப்படத்தின் பட்ஜெட் 110 கோடியாக இருந்த நிலையில் 250 கோடி வரை உலகளவில் வசூல் செய்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் 187 கோடியாகும்.

Also Read: சினிமா, அரசியல் வெற்றிக்காக விஜய் ஃபாலோ பண்ணிய விஷயம்.. இரட்டை வேஷம் போடும் தளபதி

பிகில்: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 2019 ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். பெண்களின் வலிமை, கால்பந்து போட்டி உள்ளிட்ட கதைக்களத்துடன் வெளியான இப்படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 300 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்த இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் 200 கோடியாகும்.

மாஸ்டர்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிறுவர்களுக்கு நடக்க கூடிய அநீதியை தட்டி கேக்கும் ஆசிரியராகா விஜய் இப்படத்தில் நடித்து கலக்கியிருப்பார். 135 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 300 கோடிவரை வசூலை வாரிக் குவித்தது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்த இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் மட்டும் 200 கோடியாகும்.

Also Read: நெல்சனிடம் இல்லாத ஒரு திறமை.. லோகேஷ் பக்கம் சாய்ந்த விஜய், காரணம் இதுதான்

பீஸ்ட்: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ராணுவா வீரராக விஜய் நடித்திருப்பார். தீவிரவாதிகளால் முடக்கப்படும் மாலில் உள்ள மக்களை எப்படி விஜய் காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. விஜய்யின் கேரியரில் இப்படம் பெரும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தாலும், தயாரிப்பாளரின் கல்லா நிரம்பும் வகையில் படத்தின் ரிலீசுக்கு முன்பே 250 கோடி வரை இப்படம் வியாபாரமானது.

வாரிசு: இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் ரிலீஸான இப்படம் குடும்பத்தை மையப்படுத்தி வெளியானது. விஜய்யின் கதாபாத்திரம் இப்படத்தில் பாராட்டப்பட்டாலும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது. தில் ராஜு தயாரித்த இப்படம் 300 கோடி வரை வசூலான நிலையில், 270 கோடி வரை இப்படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரமானது.

லியோ: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல பேன் இந்தியா நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ,ப்ரீ பிசினஸ் வியாபாரம் களைக்கட்ட தொடங்கியது. தற்போது வரை இப்படம் 434 கோடி வரை வியாபாரமாகி மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

Also Read: தாறுமாறாக உருவாகும் தளபதி 68 கதை.. விஜய்யின் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வெங்கட் பிரபு

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்