ஒருவழியாக போனி கபூர் கொடுத்த அதிகாரப்பூர்வ வலிமை அப்டேட்.. ஆனந்த கண்ணீரில் தல ரசிகர்கள்

சமீபகாலமாக தல அஜித் ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரே ஒரு தயாரிப்பாளர் என்றால் அது போனி கபூர் தான். வலிமை படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலான நிலையில் ஒரு அப்டேட் கூட கொடுக்காமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்து வந்தார்.

இதனால் வெறிகொண்டு தல ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நேரடியாகவே போனி கபூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில்கூட தயார் செய்யாத வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக் ஆகி விட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினர்.

மேலும் போனிகபூர் மற்ற மொழிகளில் தயாரிக்கும் படங்களின் அப்டேட்டை வெளியிட்டு வந்த நிலையில் அஜீத் படத்தை மட்டும் கிடப்பில் போட்டு வந்தார். இதுவே ரசிகர்களுக்கு பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது.

இப்படியே போனால் தன் மரியாதையை காலி செய்து விடுவார்கள் என ஒரு வழியாக சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் வலிமை படத்தை பற்றி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வலிமை படம் பிப்ரவரி 15ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் எனவும், இன்னும் ரிலீஸ் தேதி குறித்து முடிவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் பாக்கி இருக்கும் நிலையில் அதை எடுக்க விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

valimai-update
valimai-update

முன்னதாக வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒரு மாஸான ஓபனிங் பாடல் ஒன்றை விக்னேஷ் சிவன் வலிமை படத்திற்காக எழுதியுள்ளதாக ஒரு அப்டேட் கொடுத்தார் என்பதும் கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்