விஜய் கேரியரை கவுத்து போட்ட 5 இயக்குனர்களின் படங்கள்.. இப்ப வர தளபதி வாய்ப்பு கொடுக்காத காரணம்

Vijay 5 Movies Spoiled By Directors: சினிமாவில் வெற்றி தோல்வி என்பது ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். இதில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் அதை தாண்டி தான் ஒவ்வொருவரும் அவர்களுடைய உச்சகட்ட வெற்றியை அடைந்து இருப்பார்கள். அந்த வகையில் தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்யும் இதுவரை நடித்த படங்களிலே பல தோல்விகளை பார்த்திருக்கிறார்.

அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வியானதால் அந்தப் படத்தின் இயக்குனர் வேண்டவே வேண்டாம் என்று முடிவு பண்ணி அவரை விட்டு விலகி இருக்கிறார். இன்னும் சொல்லப்பலால் அடுத்த படத்தில் அவர்களுடைய டச்சை இல்லாமல் ஒதுங்கிக் கொண்டு வருகிறார். அப்படி விஜய் நடிப்பில் வெளிவந்து படு மொக்கையாக ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் ஜில்லா, புலி, பைரவா, பீஸ்ட், வாரிசு.

அந்த வகையில் புலி படத்தை எடுத்த சிம்பு தேவன், ஜில்லா படத்தை எடுத்த ஆர் டி நேசன், பைரவா படத்தை எடுத்த பரதன், பீஸ்ட் படத்தை எடுத்த நெல்சன் மற்றும் வாரிசு படத்தை எடுத்த வம்சி பைடிப்பள்ளி போன்ற இயக்குனர்களுடன் மறுபடியும் இணைய வாய்ப்பில்லை. இந்த படங்கள் அனைத்தும் விஜய்யின் நடிப்பும், கதையும் ஒன்றுமே இல்லை என்று படத்தைப் பார்த்துட்டு வந்து தலையில் ரசிகர்கள் அடித்துக் கொண்டார்கள். அந்த அளவிற்கு மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.

தற்போது வரை இந்த இயக்குனர்களிடம் மற்ற எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதற்கிடையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு வெற்றி படமாக தான் இருந்தது. ஆனாலும் சில எதிர்மறையான கருத்துக்கள் வந்ததால் அடுத்து ஏஆர் முருகதாஸ் உடன் எந்த படத்திலும் விஜய் நடிக்காமல் அவரை ஒதுக்கி விட்டார்.

இந்த லிஸ்டில் தற்போது லோகேஷும் சேர்ந்து விட்டார். ஏனென்றால் சமீபத்தில் வெளிவந்த லியோ படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. என்னதான் வசூல் அளவில் ஓரளவுக்கு லாபம் பார்த்து வந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்மறையான கருத்துக்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்துடன் அப்படியே லோகேஷையும் ஓரம் கட்டி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில் விஜய்யை பொறுத்தவரை ஒரு படம் நல்லா இருந்தால் மட்டுமே அந்த இயக்குனருடன் மறுபடியும் இணைந்து படம் பண்ணுவார். இல்லையென்றால் அந்த இயக்குனர்களை அப்படியே ஒரே படத்துடன் ஓரங்கட்டி விட்டு விடுவார். இதனால் தான் பெயிலியர் ஆன இயக்குனர்களுக்கு தற்போது வரை விஜய் மறுபடியும் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்கு காரணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்