இளையராஜா அளவுக்கு பட்டையை கிளப்பும் இயக்குனர்.. பெருமைப்பாடும் விஜய் சேதுபதி

Vijay Sethupathi : இன்று வரை தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவே பெரிய இசையமைப்பாளர் என்றாலும் இளையராஜாவுக்கு ஈடாக இன்னும் வரவில்லை.

இசைஞானி இளையராஜாவை போற்றும் வகையில் அவரது பயோபிக் இப்போது படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.

இந்நிலையில் இளையராஜா அளவுக்கு வளர்ந்து வருகிறார் இயக்குனர் ஒருவர். அதாவது சினிமாவை வித்தியாசமான தோற்றத்துடன் பார்க்கக் கூடிய அவர்தான் மிஸ்கின். இவருடைய பிசாசு 2 படம் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது.

ட்ரெயின் படத்திற்கு இசையமைக்கும் மிஷ்கின்

இந்நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படம் தான் ட்ரெயின். இந்த படத்தில் இயக்குனராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இப்போது இதற்கான பணியில் தான் இறங்கி இருக்கிறார்.

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டிம்பிள் ஹயாதி நடித்து வரும் நிலையில் கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார். மேலும் ஒரு பாடலும் இந்த படத்தில் மிஸ்கின் பாடி இருக்கிறாராம். அடுத்த இளையராஜாவை நீங்க தான் என விஜய் சேதுபதி மிஷ்கினை கலாய்த்து உள்ளாராம்.

அப்போது தயாரிப்பாளர் கலைபுலி தாணு அருகில் உள்ள போது அவரும் ஆமாம் என்று தலையாட்டினாராம். மேலும் நிஜமாகவே மிஸ்கின் இசையமைத்த பாடல் நன்றாக வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்