பல வருடமா கிடப்பில் போடப்பட்ட படம்.. போஸ்டர் பார்த்துப் பெருமூச்சு விட்ட விக்ரம்

சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ஆக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக விக்ரம் காத்துக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தைத் தாண்டி விக்ரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் கோப்ரா. ஏனென்றால் இப்படத்தில் விக்ரம் இந்தப்படத்தில் பல கெட்டப்பில் நடித்துள்ளார். இதனால் கோப்ரா படம் விக்ரமுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு வெகு காலமாக நடைபெற்று வந்தது.

டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திதை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் கோப்ரா படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்து உள்ளனர். இப்படத்தின் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுதங்கள் மற்றும் கணித எண்கள் ஆகியவை சூழ்ந்திருக்க நடுவில் விக்ரம் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் கோபுர படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

cobra poster

ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளதால் தற்போது விக்ரம் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்திற்கு பிறகு விக்ரமின் மார்க்கெட் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது வெளியாகியிருக்கும் கோப்ரா படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.