ரொமான்ஸ் வராத லோகேஷ் தயாரிப்பில் வெளியான வீடியோ.. லிப் லாக் உடன் ஃபைட் கிளப் பாடல்

Fight Club First Single: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜுக்கும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் ரொம்ப தூரம் என ரசிகர்கள் அவரை கிண்டல் அடிப்பது உண்டு. அதற்கு முக்கிய காரணம் அவருடைய படங்களில் காதல் காட்சிகள் இல்லாமல் இருப்பது தான். அப்படியே இருந்தாலும் அதில் கதாநாயகி இறப்பது போல் தான் இருக்கும். லியோ படத்தில் மட்டும் தான் எப்படியோ த்ரிஷா தப்பித்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரொமான்ஸ் உடன், லிப் லாக் காட்சியா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் நேற்று ஒரு பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. லோகேஷ் சமீபத்தில் ஜீ ஸ்குவாட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். உறியடி படத்தில் நடித்த விஜயகுமார் நடிக்கும் ஃபைட் கிளப் படம் தான் அவர் முதன் முதலில் தயாரிக்கும் படம்.

ஃபைட் கிளப் படத்தின் முதல் சிங்கிள்

விஜயகுமார் ஏற்கனவே உறியடி என்னும் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தவர். அந்தப் படத்தில் மானே மானே உறவென நெனச்சேனே என்று ஒரு பாடல் வரும். இந்த பாடல் இன்று வரை ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படுகிறது. தற்போது ஃபைட் கிளப் படத்தின் யாரும் காணாத விண்மீன் பாடல் அதேபோன்று கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read:யாஷை வைத்து இயக்கும் சத்யராஜ் பட குழந்தை நட்சத்திரம்.. ரிலீஸ் தேதியுடன் பிரம்மாண்டமாக வெளிவந்த டீசர்

96 படத்தின் இசையின் மூலம் இளைஞர்களை கவர்ந்த கோவிந்த் வசந்தா தான் இந்தப் பாட்டிற்கு இசையமைத்திருக்கிறார். கார்த்திக் நேதா இந்த இசைக்கு தன்னுடைய அழகான பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் இணைந்து பாடிய இந்த பாடலுக்கு, ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ உயிர் கொடுத்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த சாண்டி மாஸ்டர் தான் இந்தப் பாடலின் கோரியோ கிராபர். இந்த பாடலின் ஒரு சில காட்சிகள் பள்ளி காதலை நினைவுபடுத்துகிறது. கடற்கரை, கடலுக்கு நடுவே காதல் என உணர்வுகளை அசைத்துப் பார்க்கும் இந்த பாடல் முடிவில் லிப் லாக் காட்சியும் இருக்கிறது.

ஃபைட் கிளப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கியிருக்கிறார். விஜயகுமார் மற்றும் அப்பாஸ் இணைந்து தான் படத்திற்கு திரை கதையும் எழுதி இருக்கிறார்கள். ரியல் குட் பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை, வரும் டிசம்பர் 15ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் உலகம் எங்கும் திரையிட இருக்கிறது.

Also Read:இந்த வருடம் வெளிவராமல் போன 5 பெரிய ஹீரோக்களின் படங்கள்.. தரமான சம்பவத்தை செய்யப் போகும் ரோலக்ஸ்

 

 

 

 

 

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்