பாசில் இயக்கி மெகா ஹிட் அடித்த படங்கள்.. வசூல் சும்மா தாறுமாறு

முதலில் ஃபாசில்  மலையாளம் படங்களை இயக்க ஆரம்பித்தார். அதன்பிறகு தான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் தமிழில் இயக்கிய 5 படங்கள் வசூலில் தாறுமாறு ஹிட் அடித்து இவரை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

அரங்கேற்ற வேளை: பிரபு மற்றும் ரேவதி நடிப்பில் உருவான அரங்கேற்றவேளை திரைப்படத்தை ஃபாசில் தான் இயக்கினார். இப்படத்தின் மூலம்தான் பாஸில் வசூல் ரீதியாக முதலில் வெற்றியைக் கண்டார்.

இவரது திரை வாழ்க்கையில் இன்றும் முக்கிய பங்காக உள்ளது அரங்கேற்றவேளை திரைப்படம் தான்.இப்படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த லாபம் பல லட்சம் என கூறி வருகின்றனர்.

fazil
fazil

பூவே பூச்சூடவா: ஜெய்சங்கர் மற்றும் நதியா நடிப்பில் வெளியான பூவே பூச்சூடவா திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் பத்மினி மற்றும் சுகுமாரி, எஸ் வி சேகர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படமும் இவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக உள்ளது.

பூவிழி வாசலிலே: சத்யராஜ் மற்றும் சுஜிதா நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தில் வில்லனாக நடித்த அவரின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இப்படத்தில் வந்த பாடல் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு: பூவிழி வாசலிலே படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சத்யராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு எனும் படத்தின் மூலம் கூட்டணி அமைத்தார். இப்படத்தில் சத்யராஜின் ஜோடியாக சுகாசினி நடித்தார். மீண்டும் ஒரு படத்தில் இரு ரகுவரனை வில்லனாக நடித்தார். இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

காதலுக்கு மரியாதை: நடிகர் விஜய் வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது காதலுக்கு மரியாதை தான். இப்படத்தில் விஜய்வுடன் ஷாலினி நடித்த இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இன்றும் கூட இப்படத்திற்கு ரசிகர்கள் உள்ளனர் என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இப்படத்தின் மீதான வரவேற்பு இன்றும் ரசிகள்ளிடம் உள்ளது.

பாசில் இயக்கிய படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படங்களின் பட்டியல்தான். இந்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக தமிழ் சினிமாவில் சாதனை படைத்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்