படத்தில் ஹீரோயினை விட அழகாக இருந்த 6 துணை நடிகைகள்.. அதுலயும் விஜய் பட நடிகை வேற லெவல்

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளையும் தாண்டி ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெரும்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். அந்த காலத்தில் பெரிய அளவு இன்டர்நெட் வசதிகள் இல்லாததால் பலரும் அதை மனதோடு வைத்துக் கொண்டனர். ஆனால் தற்போது அந்த நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு தங்களுக்கு விருப்பமான நடிகர் நடிகைகளைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு ஆறு துணை நடிகைகளை பற்றி தான் பார்க்க போகிறோம். அதில் முதலாவதாக இருப்பவர் தான் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த தீப்தி நம்பியார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் பிரியா ஆனந்தை விட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சுசா குமார். பின்னாளில் இவர் மா கா பா ஆனந்த் நடித்த மாணிக் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஆர்யா நடித்த ராஜாராணி படத்தில் நயன்தாராவின் தோழியாக ரசிகர்களை கவர்ந்தவர் தான் மிஷா கோஷல். மேலும் விக்ரம் மற்றும் அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்காவின் அசிஸ்டன்ட் வக்கீலாக நடித்த பெண்ணும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் பீர் வசனம் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் தான் மாயா. அந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார்.

ஆனாலும் இவர்கள் எல்லாத்தையும்விட தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த ராகினி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அமலா பாலை விட அந்த படத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட நாயகி இவர்தான்.

favorite-side-actress-cinemapettai
favorite-side-actress-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்