அதிகமாகிக் கொண்டே போகும் விரிசல்.. விஜய்யிடம் கட் அண்ட் ரைட்டாக பேச போகும் மாமனார்

தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து இன்னும் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் இரண்டு கதைகளை தேர்வு செய்து தயாரிப்பாளர்களை முடிவு செய்ய இருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து திட்டமிட்டு கொண்டிருக்கும் விஜய் ரிலாக்ஸாக குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் பிளான் போட்டுள்ளார். அந்த வகையில் அவர் தன் மாமனார் வீட்டில் இரண்டு வாரங்கள் தங்கி இருக்க முடிவு செய்து இருக்கிறாராம். எப்போதுமே விஜய் ஒரு படம் முடித்து விட்டால் லண்டனுக்கு பறப்பது வழக்கம் தான்.

Also read:இதுவரை பார்க்காத கோபத்தில் விஜய்.. வாரிசு படக்குழுவினருக்கு நெருப்பை காட்டிய இளையதளபதி

ஆனால் இந்த முறை மருமகனின் வரவை அவருடைய மாமனார் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். ஏனென்றால் விஜய்க்கும் அவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கும் இப்போது சரியான பேச்சு வார்த்தையும், சுமூகமான உறவும் இல்லை. மேலும் அவர்களை பற்றிய விவகாரமும் மீடியாவில் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இவை அனைத்தும் சேர்ந்து விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால் அவர் தன் சம்மந்தியிடம் இது பற்றி கூறி அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். அதனால் அவர் விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் இருவருக்கும் இடையே சமரசம் பேசும் முயற்சியில் இருக்கிறாராம்.

Also read:தளபதி-67 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர்தான்.. வலையில் சிக்கிய சுறா!

இன்னும் சில வாரங்களில் விஜய் லண்டனுக்கு வர இருப்பதால் அங்கு அவருடைய வீட்டில் வைத்தே அப்பா மகன் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி சேர்த்து வைக்கவும் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. நிச்சயம் இந்த முயற்சி கைகூடும் என்ற நம்பிக்கையில் சோபா சந்திரசேகர் இருக்கிறார்.

அதனால் கூடிய விரைவில் விஜய் எஸ் ஏ சந்திரசேகர் இருவரும் கருத்து வேறுபாடு நீங்கி சமாதானம் ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம். லண்டன் சென்ற கையோடு விஜய் அமெரிக்காவுக்கு தன் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப் செல்லவும் திட்டமிட்டு இருக்கிறார். அதை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார்.

Also read:களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

- Advertisement -