வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

22 வயது நடிகையை மடக்கிய 63 வயது முரட்டு ஹீரோ.. அப்பாவும் மகனும் மேடையில் அடிக்கும் லூட்டி

Top Actor Controversy: இந்த வயசுல இம்புட்டு ஆட்டமா என திரை உலகை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய அந்த நடிகர், இப்போது  22 வயது இளம் நடிகையுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இந்த படத்துல வேணா அவர் பொண்ணா நடிப்பாங்க, ஆனா அடுத்த படத்துல கதாநாயகியாக நடிக்குவங்க என்று பலரும் கலாய்த்து வந்தனர்.

60 வயதைக் கடந்தும் ஆக்ஷனில் இளம் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுப்பவர் தான் ‘பாலையா’ என செல்லமாக ரசிகர்கள் கூப்பிடக்கூடிய அக்கட தேசத்து முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் பாலையாவிற்கு மகளாக நடிகை ஸ்ரீலீலா தற்போது பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

Also read: ரஜினி விட்டதை பிடித்த கமல்.. அதை பிடிக்க முடியாமல் ஏன்டா விட்டோம் என்று வருத்தப்படும் நடிகர்கள்.!

‘22 வயதாகும் ஸ்ரீ லீலா இந்த படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை மாமா மாமான்று அழைத்து வந்தார். அடுத்த படத்தில் கண்டிப்பா உங்களுக்கு கதாநாயகியாக தான் நடிப்பேன் என்றும்  கூறினார். இதைப் பற்றி பாலையா அவருடைய மனைவி மற்றும் மகளிடம் சொன்னபோது இடையில் குறிப்பிட்டு பேசிய அவருடைய மகன் மோக்ஷக்னா, ‘நீங்க ரெண்டு பேரும் ஜோடி போட்டா நல்லா இருக்காது. ஸ்ரீலீலாவுடன் நான்  ஜோடி போட்டு நடிக்கப் போகிறேன்’ என்று கூறியதை இப்போது ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசி சிரித்தார்.

ஆனால் இதுபோன்ற சம்பவம் பாலையாவிற்கு புதிதல்ல. ஏற்கனவே ஸ்ரீ ரெட்டி உடன் ஜோடி போட்டபோது ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தது. குறிப்பாக வீரசிம்ஹா ரெட்டி படத்தில் முரட்டு ஹீரோவான இருக்கும் பாலையாவிற்கு அம்மாவாக இளம் நடிகை ஹனிரோஸ் நடித்ததெல்லாம் காலக்கொடுமை.

Also read: சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து பல்பு வாங்கும் நடிகர்.. அடுத்தடுத்து விழும் மரண அடி

இது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கும் நடந்திருக்கிறது. முதலில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்பு முத்து படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உப்பென்னா படத்தில் தனக்கு மகளாக நடித்த கீர்த்தி செட்டி உடன் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஜோடி போட்டு நடிக்க மாட்டேன் என வந்த வாய்ப்பை நிராகரித்ததை பலரும் பாராட்டினார்கள்.

ஆனால் 63 வயதாகும் பாலையாவுடன் மகளாக நடித்த  பின் அடுத்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என கங்கணம் கட்டும் ஸ்ரீலீலா,  தந்தைக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி போட வேண்டும் என ஆசைப்படும் ஹீரோ இதெல்லாம் பார்க்கும்போது திரையுலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என்று பலரும் தலையில் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் வேறு சிலர், சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

Also read: லிப் லாக் காட்சியா தெறித்து ஓடும் 4 ஹீரோக்கள்.. ஏழடியில் இருப்பதால் செட்டே ஆகாத சிபிராஜ்

- Advertisement -

Trending News