வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கம்பேக் கொடுக்க மாட்டாங்களா என ஏங்க வைத்த 5 ஹீரோயின்கள்.. இருக்கும் இடம் தெரியாமல் போன விஜய் பட ஹீரோயின்

புது நடிகைகளின் வரவு அதிகமானால் சில ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஆனால் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் போதே சில நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள். அவர்கள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க மாட்டார்களா என ஏங்கவும் வைத்து விடுவார்கள். அப்படி ரசிகர்களை இப்போது வரை ஏங்க வைத்த ஐந்து நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

சுவலட்சுமி: குடும்ப பங்கான தோற்றத்தில் பாந்தமான அழகும் கொண்ட இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு இவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியவில்லை என்று கூட சொல்லலாம். ஆனாலும் இவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

Also read: முழு நேர வேலையாகவும் காதலித்த ஜெமினியின் 5 படங்கள்.. வசீகரா பேச்சால் கவர்ந்த காதல் மன்னன்

அசின்: நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்த பெருமை இவருக்கு உண்டு. ஆனாலும் இவர் ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தமிழை ஓரங்கட்டி விட்டு பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு சில திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2016 ம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இருப்பினும் இவருடைய வருகைக்காக தமிழ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

லட்சுமி மேனன்: கும்கி, சுந்தரபாண்டியன் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் ரெக்க திரைப்படத்தில் நடித்த பிறகு சில வருடங்கள் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. அதை தொடர்ந்து புலிக்குத்தி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்ரீதிவ்யா: சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி அந்தஸ்தை பிடித்தார். ஹோம்லி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சில வருடங்களாக எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தார். தற்போது இவர் மீண்டும் ரெய்டு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

Also read: 4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த பசங்க பட நட்சத்திரம்.. டிரெண்டாகும் போட்டோஸ்

அனுஷ்கா: தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இடத்தை பிடித்திருந்த இவர் பாகுபலி திரைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றார். திறமையான நடிகையான இவர் சில திரைப்படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படம் இவருக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்த இவரால் அதன் பிறகு குறைக்க முடியவில்லை.

இதனால் இவருக்கு வாய்ப்புகள் வருவதும் கணிசமாக குறைந்தது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு இனி வாய்ப்புகள் வருவது கஷ்டம் என்ற ரீதியிலும் பேசப்பட்டது. இருந்தாலும் ரசிகர்கள் இவருடைய வரவை எதிர்நோக்கி காத்திருந்தார்கள். அதற்கு பலனளிக்கும் வகையில் தற்போது அனுஷ்கா ஒரு தெலுங்கு திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் வேற லெவல் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

- Advertisement -

Trending News