சூப்பர் ஹிட் படம் கொடுத்த தயாரிப்பாளர் செத்தும் கண்டுக்காத சூர்யா.. அப்படி என்ன பஞ்சாயத்தோ!

நடிகரையும் தாண்டி சூர்யா நல்ல மனிதர் என பலரும் கூறிக் கொண்டிருக்கும் வேளையில் தனக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சூர்யாவின் ஆரம்ப காலகட்டங்களில் அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்த திரைப்படங்கள் தான் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் மற்றும் நந்தா. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.

இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி எனும் படத்தில் நடித்தார். இந்த படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்துக்கும் ஏஆர் முருகதாஸ் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படத்தின் கதையை திருடி எடுத்ததாக சர்ச்சைகளும் அந்த குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த படத்தை சேலம் சந்திரசேகரன் என்பவர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார். அப்போது இந்த படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. மேலும் சூர்யாவின் சினிமா கரியரில் திருப்புமுனை கொடுத்த படமாகவும் இருந்தது.

இப்படிப்பட்ட படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சமீபத்தில் மறைந்து விட்டாராம். இதற்கு சூர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூட இரங்கல் வெளியிடவில்லை என்பதை ரசிகர்களின் வேதனையாக உள்ளது.

கஜினி படத்தின் போது இருவருக்கும் ஒரு பஞ்சாயத்து இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அது எந்த மாதிரியான பஞ்சாயத்து என்பதை தற்போது வரை வெளியிடாமல் மூடி மறைத்துவிட்டனர்.

ghajini-cinemapettai
ghajini-cinemapettai