செல்லத்த செருப்பால அடிப்பேன் என கூறிய போட்டியாளர்.. பவானிக்கு ஆதரவாக கொந்தளித்த ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகள் உடன் நடந்து வருகிறது. இதில் நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக் ஜூரி பட்ஜெட் கான டாஸ்க்கை நேற்று கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டில் நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம்  போன்ற ஐந்து நாணயங்கள் பெட்டியில் வைக்கப்படும். அதை  போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாமல் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் நபர் அதை பிக்பாஸுக்கு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் எடுப்பதை யாராவது பார்த்துவிட்டால் எடுத்த இடத்திலேயே வைத்து விட வேண்டும். பின்னர் அவர்கள் அங்கு உள்ள பாதாள சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுவே டாஸ்கின் ரூல்ஸ் ஆகும்.

இதில் ஐக்கி, அபிஷேக், மதுமிதா போன்றோர் நாணயங்களை எடுத்து பதுக்கி வைத்தனர். அப்போது பவானியும் ஒரு நாணயத்தை கைப்பற்றினார். அதை அவர் ஒரு இடத்தில் பதுக்கி வைக்கும் போது அபினய் பார்த்துவிட்டார்.

இதனால் பதறிப்போன பவானி யாரிடமும் சொல்லி விடாதே என்று கூறினார். அதற்கு அபினய் பவானியை செருப்பால அடிப்பேன் என்று கூறிவிட்டு சென்றார். இதைக் கேட்டு அதிர்ந்த பவானி பேச்சின்றி அமர்ந்திருந்தார். அவருடன் மதுமிதாவும் இருந்தார்.

என்னதான் வீட்டில் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பேசிக் கொண்டாலும், இது சற்று அதிகப்படியாக உள்ளது. இந்த வாரம் கமல் இதை நிச்சயம் விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

pavani-reddy-bigg-boss
pavani-reddy-bigg-boss
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்